அஜித் படம் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அஜீத் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம் என்கிறார்கள்.
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நேர் கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் அதற்குள் படம் தயாராகாது என்றும் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போகும் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.











