செய்திக் குறிப்புகள்

விஜய் விக்ரம் விஜய்சேதுபதி நயன்தாரா படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட்

தமிழ்த் திரையுலகின் தற்போதைய பெரிய தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ. இந்நிறுவனம் தங்கள் படங்கள் பற்றிய புதிய செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி…

1. இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர்.விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

2. நடிப்பிற்காக எந்தத் தோற்றத்தையும் தனக்குள் கொண்டு வரும் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் 90 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுற்றுள்ளது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 விழுக்காடு மட்டுமே பாக்கி இருக்கிறது

3. விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெற்றுள்ளது. விறுவிறுப்பான கதை அம்சம் உள்ள இப்படம் சிறப்பாக வளர்ந்து வருகிறது

4. விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இளைஞர்களின் ஆதர்ச இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. விஜய்சேதுபதி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெற்றிக்கூட்டணி என்பதால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முக்கியமான படமாக இருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் குறைந்து தளர்வு வந்ததும் இப்படங்களின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் இருக்கும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Posts