சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் அனிருத் வேண்டவே வேண்டாம் – விஜய் 65 க்காக ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த முடிவு

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. 
கொரோனா சிக்கல் முடிவ்டைந்தவுடன் இப்படம் வெளியாகும்.

இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன.
இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது.

அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அனிருத், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னபோதும் ஏ.ஆர்.முருகதாஸ் தமனையே தேர்ந்தெடுத்துள்ளார்.

அதற்குக் காரணம், அனிருத், ஏ.ஆர்.ரகுமான் போன்றோரிடம் அவசரத்துக்கு வேலை வாங்க முடியவில்லை எனவே அவர்கள் வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதனால் விஜய் 65 படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு தமனுக்குக் கிடைத்துள்ளது. 

Related Posts