சினிமா செய்திகள்

இந்தியன் 2 கோர விபத்தில் மறைந்தவர்கள் – லைகா நிறுவனம் அறிவிப்பு

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

அவற்றைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

பிப்ரவரி 19 அன்று இரவு நடந்த படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்காக கிரேன் அமைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பிரம்மாணட விளக்கு ஒன்றை கிரேன் மீது வைத்ததால் எடை தாங்காமல் கிரேன் அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

சொற்களில் அடங்காத துயரம் இது,பிப்ரவரி 19,2020 அன்று இந்தியன் 2 செட்டில் எதிர்பாராமல் நடந்துவிட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா,கலை இயக்குநரின் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய கடும் உழைப்பாளிகளை இழந்துவிட்டோம்.

அவர்கள் குடும்பதினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Posts