பெரிய விலைக்கு விற்ற விஜய்யின் மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் மாஸ்டர்.
இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார்
இப்படத்தின் படப்பிடிப்பு, 2019 அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
படம் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெரும் தொகைக்கு விற்பனையானது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசப்படும் தகவல்கள் படி சுமார் 32 கோடி ரூபாய் கொடுத்து இந்த உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
படத்தின் முதல்பார்வை வெளியாகியிருக்கும் நிலையில் இப்படத்தின் வியாபாரம் தொடங்கியிருக்கிறதாம்.
முதலில் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. யாஹியாபாய் மற்றும் மாலிக் ஆகியோர் இணைந்து அந்த உரிமையைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதன் விலை 29 கோடி என்றும் சொல்கிறார்கள். இது விஜய் படத்துக்குக் கிடைத்திருக்கும் பெரிய விலை என்றும் சொல்கிறார்கள்.











