சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

1991 ஆம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன்பின்னர் கதாநாயனாக உயர்ந்தவர் நெப்போலியன்.

திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தவர்.

தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் அவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

டெல்கணேசன் தயாரிப்பில் டேனியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிறிஸ்துமஸ் கூப்பன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நெப்போலியன்.

இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள்.

அப்போது பேசிய நடிகர் நெப்போலியன், இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறேன். அடுத்த ஒரு படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடம் அமைந்திருக்கிறது.

அதற்கடுத்து நானே கதாநாயகனாக நடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

ஹாலிவுட் படங்களில் டப்பிங் எனப்படும் குரல்பதிவு என்கிற ஒன்றே கிடையாது. படப்பிடிப்பின் போது பேசுவதை அப்படியே பதிவு செய்வார்கள். அது ஒன்றுதான் நம் படங்களுக்கும் ஹாலிவுட் படங்களுக்குமான வித்தியாசம் என்றும் அவர் கூறினார்.

Related Posts