சினிமா செய்திகள்

விஷாலை வைத்து படமெடுக்கும் தனுஷ் மேனேஜர்

தனுஷின் படத்தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர் வினோத்.

இவர் அங்கு பணிபுரியும்போதே வேறு சில படங்களின் தயாரிப்புக்கு உதவியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் தற்போது ஒரு படத்தைத் தனியாகத் தயாரிக்கவிருக்கிறாராம்.

தனுஷிடம் பணிபுரிகிறவர் என்பதால் அவரை நாயகனாக வைத்துத்தான் படம் எடுக்கப் போகிறார் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை.

அவர் விஷாலை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்கவிருக்கிறாராம், அதற்காக விஷாலுக்கு ஒரு பெரும் தொகையை முன்பணமாகக் கொடுத்திருக்கிறாராம்.

இயக்குநர், மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

தனுஷ் நிறுவன நிர்வாகி விஷாலை வைத்துப் படமெடுக்கவிருக்கிறார் என்பது அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.

Related Posts