சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு பற்றிப் பரவிய வதந்தியும் அதற்கான விளக்கமும்

சிம்பு நடிப்பில் பிப்ரவரி 1,2019 அன்று வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அத்துடன், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் விவரமும் அறிவிக்கப்படவில்லை.

இதனால், ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவி வருகிறது. ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

மாநாடு படம் கைவிடப்பட்டது என பரவிக் கொண்டிருக்கும் பொய்ச் செய்தியை நிறுத்துமாறு வேண்டுகிறேன்.ஒரு படத்தைத் தொடங்குவது என்பது சாதாரண விஷயமில்லை. உங்கள் பொய்ச் செய்தியை நிறுத்துங்கள். ‘மாநாடு’ குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

கதை விவாதம் மற்றும் முன்தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும்

இவ்வாறு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

சிம்பு உடல் எடைக்குறைப்பு சிகிச்சையில் இருக்கிறார் என்றும் அது முடிந்து அவர் வந்ததும் மாநாடு படம் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts