October 23, 2026
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம் ஹீரோ

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், நடித்துக்கொண்டிருக்கிறார்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் தொடங்கியுள்ளது.

இந்தப்படத்துக்கு ஹீரோ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்தப்படத்துக்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.

இதன்மூலம் சிவகார்த்திகேயன், ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts