சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் முடிவு சன் பிக்சர்ஸ் கோபம் – காஞ்சனா 3 ரிலீஸ் மாற்றம்

ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்தப்படம் முதலில் ஏப்ரல் 18 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 அன்றே வெளியாகும் என்று சொன்னார்கள்.

இப்போது அதிலும் மாற்றம் வந்திருக்கிறதாம். அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ஏப்ரல் மாதம் முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும் என்பதால் இந்த மாற்றம் என்று வெளியில் காரணம் சொல்கிறார்களாம்.

ஆனால் உண்மையில் படம் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள்.

படம் முழுமையாக முடிவடைந்த பின் போட்டுப் பார்த்தபோது திருப்தி தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் அண்மையில் ஓவியாவை வைத்து சில நாட்கள் மறு படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.

அதைத் தொகுத்துப் பார்த்துவிட்டு அப்போதும் திருப்தியடையாத ராகவா லாரன்ஸ், இன்னும் வேலை இருக்கிறது, எனவே ஏப்ரல் 12 இல் வெளியிடுகிற மாதிரி படத்தைத் தர இயலாது என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், வேறு வழியில்லாமல் வெளியீட்டுத் தேதியை மாற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறதாம்.

Related Posts