இந்தியன் 2 – கமல் கோரிக்கை நிறைவேற்றிய சுபாஸ்கரன்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் நடந்தது.
அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்படத்தின் தொடக்க விழாவுக்காக லைகா நிறுவன அதிபர் சுபாஸ்கரன், தனி விமானத்தில் பறந்து வந்தாராம்.
தொடக்க விழாவுக்கு அவர் வருவதாக இல்லையாம். ஆனால் கமல் அவரைத் தொடர்பு கொண்டு, நீங்கள் கண்டிப்பாக தொடக்க விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாராம்.
அதனாலேயே தனி விமானம் வைத்துக்கொண்டு அவர் வந்ததாகச் சொல்கிறார்கள்.











