ரஜினிக்கு 24 மணிநேரம் அஜித்துக்கு 9 மணி நேரம்
2019 பொங்கல் வெளியீடாக ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்தப்படங்களை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.
இது அஜித் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதனால், ‘விஸ்வாசம்’ பட முன்னோட்டம், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சுமார் 10 லட்சம் விருப்பங்கள்பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான் என்கிறார்கள்.
ரஜினி நடித்துள்ள’பேட்ட’ படத்தின் முன்னோட்டம் 24 மணி நேரத்தில் செய்த சாதனையை 9 மணி நேரத்தில் ‘விஸ்வாசம்’ பட முன்னோட்டம் செய்துள்ளதாம்.
இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.










