சினிமா செய்திகள்

ஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்

2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியிருக்கிறது.

தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் டிசம்பர் 21 அன்று வெளியாகும் என சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.

ஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகிய இருவர் படமும் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Posts