கஜ புயல் பாதிப்புக்காக ரூ 50 இலட்சம் கொடுத்த சூர்யா – மக்கள் பாராட்டு
கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.
அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் திரைத்துறையிலிருந்து யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் ஐம்பது இலட்சம் நிவாரண உதவி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவித்தொகை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சூர்யா குடும்பத்தின் இந்த உதவிக்கு பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு உதவி செய்பவர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.











