சீமராஜா சூரிக்கு அஜீத்தின் அதிரடிப்பாடல்
சூர்யா, விஷால் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்கள் மட்டுமே ஒரு கதாபாத்திரத்துக்காக, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடிப்பார்கள். ஆனால், காமெடி நடிகர்கள் யாருமே தங்களுடைய கதாபாத்திரத்துக்காக அப்படி செய்வதில்லை.
தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ‘சீமராஜா’ படத்துக்காக நகைச்சுவை நடிகர் சூரி, சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 13) வெளியாகவுள்ளதால், சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “8 மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி செய்து, இந்த சிக்ஸ்பேக்கை கொண்டு வந்துள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘சீமராஜா’ படத்தில் வரும் அரசர் காலத்து காட்சிகளில் இந்த சிக்ஸ் பேக்குடன் சூரி வருவார் என்று தெரிகிறது. படக்குழுவினர் இக்காட்சியின் தன்மையை விளக்கியவுடனே, எவ்வித மறுப்புமின்றி சிக்ஸ் பேக் வைத்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார் சூரி. இதனை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிகவும் பாராட்டிப் பேசினார் சிவகார்த்திகேயன்.
தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள சூரியின் சிக்ஸ் பேக் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதோடு சூரி வருகிற காட்சிகளில் வீரம் படத்தில் இடம்பெற்ற
ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்
ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செதுக்களம் சிதரிடும் வீரம்
இந்தப்பாடல் பின்னணியில் ஒலிக்குமாம். அந்தக்காட்சிகளில் அரங்கம் அதிர்வது உறுதி என்கிறார்கள்.











