என் ஜி கே தீபாவளிக்கு வெளியாகாதது ஏன்? – சூர்யா விளக்கம்
மூவிபஃப் நிறுவனம் சார்பில், ஃபர்ஸ்ட் கிளாப் தமிழ் குறும்படப் போட்டி நடந்தது.அதில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அவர், மேடையில் பேசத் தொடங்கியதுமே, ரசிகர்கள் என்.ஜி.கே… என்.ஜி.கே என்று குரல் எழுப்பினர்.
அதனால்,
இதே மேடையிலதான் சொன்னேன். என்.ஜி.கே திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும்னு. ஆனால் அது நடக்கவில்லை.
எனக்கு இந்தத் தருணத்தில் பாலா அண்ணா சொன்னதுதான் நியாபகம் வருது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வர அது பட்டாசோ பொங்கலோ கிடையாது.
அது, படம். சில விஷயங்கள் நம்மை மீறி நடக்குது. எல்லாமே ஒரு நம்பிக்கையில் போய்கிட்டு இருக்கு. இந்தப் படத்தை எப்படி ஆரம்பிச்சோமோ, அதே பாசிட்டிவிட்டியோட முடிப்போம். ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க. சொன்ன மாதிரி தீபாவளிக்கு வெளியிட முடியலன்னு வருத்தமா இருக்கு. உங்க அன்பு எப்பவும் என்கூட இருக்கும்னு நம்புறேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்…
இந்தக் குறும்படப் போட்டி எங்களுக்குப் பல திறமையாளர்களை அடையாளம் காட்டியுள்ளது அவர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறினார் சூர்யா.











