சினிமா செய்திகள்

சர்கார் படக்குழுவின் புதுமுயற்சி

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு நேற்று இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

நாளை முதல், சர்கார் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்படும். நாளை ஒரு படம் வெளியிடப்படும், ஒவ்வொரு நாளும் ஒன்று என்கிற கணக்கில் ஐந்து நாட்கள் வெளியிடப்படும் என்று சொல்லியிருந்தார்கள்.

அதன்படி இன்று ( ஆகஸ்ட் 26 ) காலை 11 மணிக்கு ஒரு புகைப்படம் வெளியிட்டார்கள்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகியோர் இடம் பெற்றிருக்கும் அந்தப் புகைப்படம் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

படத்தை விளம்பரம் செய்ய இப்படி ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

Related Posts