ரஜினி படங்களை இயக்கியதால் பா.இரஞ்சித்துக்கு சிக்கல்
காலா படத்தைத். தொடர்ந்து , அதன் இயக்குநர் பா.இரஞ்சித் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது.
பா.இரஞ்சித்தை அழைத்து விஜய் பேசியதால் அச்செய்தி பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னால் எனக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இரஞ்சித்திடம் கேட்டிருக்கிறாராம்.
ஏற்கெனவே ஞானவேல்ராஜா தயாரிப்பில் மெட்ராஸ் படத்தை இரஞ்சித் இயக்கினார். அப்போதே அந்த நிறுவனத்துக்கு இன்னொரு படம் இயக்குவதாக இரஞ்சித் ஒப்புக்கொண்டிருந்தாராம்.
அந்த ஒப்பந்தத்தின்படியே ஞானவேல்ராஜா இப்போது கேட்டதாகவும் அதற்கு இரஞ்சித் ஒப்புக்கொண்ட தாகவும் சொல்லப்படுகிறது.
யார் கதாநாயகன்? என்பதை பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்யப்பபட்டிருக்கிறதாம்.
ஏற்கெனவே பேசியபடி சூர்யா நடிக்கப் போகிறாரா? அல்லது வேறு நாயகனா? என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
சூர்யா இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படம் இருக்கிறது.
அவற்றை முடித்துவிட்டு அவர் வரும்வரை இரஞ்சித் சும்மாயிருக்க முடியாது.
ஞானவேல்ராஜா தயாரிப்பில் விஜய் நடிக்கமாட்டார்.
அப்படியானால் இரஞ்சித் படத்தில் நடிக்கப் போவது யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பெரிய கதாநாயகர்களை இயக்கும் எல்லா இயக்குநர்களுக்கும் வரக்கூடிய சிக்கல்தான் இப்போது பா.இரஞ்சித்துக்கும் வந்திருக்கிறது என்கிறார்கள்.










