கபாலி 18 காலா 5 – கவலை கொள்ள வைக்கும் கர்நாடக கணக்கு
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஜூன் 7 அன்று வெளியானது.
இப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிட கடும் எதிர்ப்பு நிலவியது. நீண்ட சமரசங்களுக்குப் பின்னர் கடைசி நேரத்தில் கர்நாடகத்தில் படத்தை வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் வெளியான படத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் போய் விட்டது.
இந்தப்படம் மொத்தமாக் சுமார் ஐந்துகோடி வரை வசூல் செய்யும் என்று வியாபாரம் சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.
முன்பதிவு இல்லாமல் போனதும் திரையரங்குக்குப் போனால் சிக்கல் வரலாம் என்று மக்கள் பயந்ததும்தான் வசூல் இவ்வளவு மோசமாக காரணம் என்று சமாதானம் சொல்கிறார்கள்.
ரஞ்சித் ரஜினி கூட்டணியின் முந்தைய படமான கபாலி, கர்நாடகத்தில் சுமார் பதினெட்டு கோடி வசூலித்ததாம்.
அதில் மூன்றில் ஒரு பங்கைக் கூட இந்தப்படம் வசூல் செய் யவில்லை என்பது மிகவும் கவலை கொள்ளக்கூடிய விசயம்தான்.











