தலைமுடி வணிகம் பேசும் படம் – வெற்றிக்கு வெற்றி
தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’.இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி,பிக்பாஸ் அபிராமி,ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.
எம்.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்,படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம், நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்…,
தயாரிப்பாளர் எம். மூர்த்தி பேசியதாவது….
நான் முதலில் நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன்.இன்று தயாரிப்பாளராக உங்கள் முன்னால் நிற்கிறேன். இயக்குநர் தீரன் அருண்குமார் இந்தக்கதையை என்னிடம் சொன்னபோது,மிகவும் புதுமையான கதைக்களமாக இருந்தது.வேறு சில தயாரிப்பாளர்களிடமும் கதையைச் சொல்லியிருந்தாலும்,அதிககாலம் எடுத்துக்கொண்டதால்,இந்தப்படத்தைத் நானே தயாரிக்க சம்மதித்தேன்.இந்தப்படம் உருவாக எனது முழுஆதரவையும் கொடுத்தேன்.
இதுபோன்ற புதுமையான கதையைப் படமாக்கும்போது இரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற தயக்கம் இருந்தது.ஆனால் எனது மனைவி,மகளிடம் கதையைப் பற்றிக் கூறியபோது,இது வித்தியாசமான முயற்சி என்றும்,நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பேசும் கதை என்றும் ஊக்கமளித்தார்கள்.இந்தப்படத்தை உருவாக்குவதில் கதாநாயகன் வெற்றியின் பங்களிப்பு மிக முக்கியமானது.மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரவு,பகல் பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.
நான் இதுவரை ஆயிரக்கணக்கான படங்களைப் பார்த்திருப்பேன்.அந்த அனுபவத்தில் சொல்கிறேன்,‘பிளாக் கோல்டு’ இந்திய சினிமாவில் ஒரு புதுமையான படமாக இருக்கும்.படத்தின் மேக்கிங்கும் மிகச்சிறப்பாக வந்துள்ளது.ஒரு படத்தைச் சிறிய படம்,பெரிய படம் என்று பார்ப்பதைவிட நல்லபடமா என்பதுதான் முக்கியம்.இயக்குநர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் இந்தப்படத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் நிச்சயம் இரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.ஊடக நண்பர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்குத் தங்களது ஆதரவை வழங்கவேண்டும்.இந்தப்படத்தைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.அனைவருக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசியதாவது….
‘பிளாக் கோல்டு’ படக்குழு சார்பாக ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நடிகர் வெற்றியுடன் இது எனக்கு இரண்டாவது படம்.அவர் இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.‘பிளாக் கோல்ட்’ படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்.நடிகை அபிராமியின் நடிப்புக்கு நான் ஏற்கெனவே இரசிகன்.இந்தப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் துணிச்சலான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் ஏ.வெங்கடேஷ்,ஜப்பான் குமார் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை.குறிப்பாக,நகைச்சுவை கதாபாத்திரங்களில் பார்த்துப் பழகிய ஜப்பான்குமாரை இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தீவிரமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். நடிகர்கள் அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இந்தப்படத்திற்குப் பிறகு அவர்களைப் பார்க்கும் இயக்குநர்களின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்.
பாடலாசிரியர் மோகன் ராஜாவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.‘வெங்காட்டு பூமி’பாடலுக்காக அவர் எழுதிய வரிகளில் எந்தத் திருத்தமும் செய்யத் தேவையில்லை.அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.பாடகர்கள் சைந்தவி,சத்யா கபூர், சத்யா பிரகாஷ்,சஞ்சனா கல்மஞ்சி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.குறிப்பாக,சைந்தவி இந்தப்படத்தில் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு உயர்ந்த ஸ்வரத்தில் பாடியிருப்பது சிறப்பு.
தயாரிப்பாளர் மூர்த்தி சாரின் ஆதரவு இல்லாமல் இந்தப்படம் சாத்தியமாகியிருக்காது.நல்லகதையை தேர்வு செய்திருக்கிறார். இயக்குநர் தீரன் அருண்குமார் என்னுடைய ‘ஸ்மைல் மேன்’ படத்தைப் பார்த்துவிட்டு என்னைத் தொடர்புகொண்டு இந்தப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்தார்.பெரிய இசையமைப்பாளர்களைப் பரிந்துரைத்தபோதும்,கதைக்கும் களத்திற்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்பி தேர்வு செய்தார்.அதற்காக அவருக்கு நன்றி.தொடர்ந்து வெற்றி உள்ளிட்ட படக்குழுவினருடன் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமி பேசியதாவது….
‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனக்கு முதல்படம்.இந்தப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமார் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும்,பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.விரைவில் இதே இடத்தில் நடைபெறும் படத்தின் வெற்றிச் சந்திப்பில் மீண்டும் அனைவரையும் சந்திக்கிறேன்.நன்றி,வணக்கம் என்றார்.
படத்தொகுப்பாளர் தினேஷ்குமார் பேசியதாவது…..
ஒரு கதையைத் தொடங்குவதில் இருந்து படம் வெளியாகி முடிவடையும் வரை நிறைய பேருடைய உழைப்பு இருக்கும்.அந்தவகையில் ‘பிளாக் கோல்டு’ படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது.இந்தப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமார் அவர்களுக்கு நன்றி.எடிட்டிங்கில் எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருந்தார். முதலில் என்னுடைய பாணியில் ஒரு காட்சியை எடிட் செய்து கொடுத்த பிறகு,அதில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதை மட்டுமே ஆலோசிப்போம்.இதே சுதந்திரத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளருக்கும் அவர் வழங்கியிருந்தார்.
இயக்குநர்,ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர் மற்றும் உதவிஇயக்குநர்கள் என அனைவருக்குள்ளும் நல்லபுரிதலும் ஒருங்கிணைப்பும் இருந்தது.ஒரு நல்லபடத்தைக் கொடுக்கவேண்டும்,இன்னும் எப்படிச் சிறப்பாக உருவாக்கலாம் என்பதில்தான் எங்களுடைய கவனம் இருந்தது.தயாரிப்பாளர் மூர்த்தி சாரும் எங்களுக்கு முழுமையான ஆதரவு அளித்தார்.பட்ஜெட் அல்லது வேறு கட்டுப்பாடுகள் குறித்து அதிகம் பேசாமல்,படம் நன்றாக வருமா,நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா என்று மட்டுமே கேட்பார்.அந்த ஆதரவு படத்தின் தரத்தை மேம்படுத்த உதவியது.
இந்தப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பையும் படக்குழுவினரிடம் என்னை அறிமுகப்படுத்தியதற்காகவும் துரை ப்ரோவுக்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்,ஒரு நல்லபடம் அதிகமான இரசிகர்களைச் சென்றடைவதில் ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.நீங்கள் அளிக்கும் ஆதரவும் பகிர்வும்தான் நல்லபடங்களை இரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
‘பிளாக் கோல்டு’ படத்தின் கதையிலோ,காட்சிகளிலோ எந்தவிதமான விஷயத்தையும் நாங்கள் முன்கூட்டியே வெளிப்படுத்தவில்லை. இரசிகர்கள் திரையரங்கில் பார்த்து அந்த ஆச்சரியத்தை அனுபவிக்க வேண்டும்.படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நல்லபடத்தைப் பார்த்த திருப்தியுடன் வருவீர்கள் என்று நம்புகிறேன்.இப்படம் மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.
பாடகர் ராம் பேசியதாவது….
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த 16 ஆண்டுகளாக என்டர்டெயின்மென்ட் துறையில் இயங்கி வருகிறேன்.இசைப் பயிற்சிப்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறேன்.அதில் சுமார் 20 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.அதேபோல்,இன்டிபென்டன்ட் மியூசிக் துறையிலும் கடந்த 16 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன்.
இயக்குநர் தீரன் அருண்குமார் எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளாகப் பழக்கம்.எடிசன் விருது விழாவில் நான் இசை நிகழ்ச்சி நடத்தியபோது அவரைச் சந்தித்தேன்.அன்றிலிருந்து எங்களுக்குள் நல்லநட்பு இருந்து வருகிறது.என்னுடைய இசைப்பயணம் மற்றும் முயற்சிகளை அவர் தொடர்ந்து கவனித்து வந்தார்.
என்னுடைய 16 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமார் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப்படத்தின் மூலம் எனது நீண்டநாள் கனவு நிறைவேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.அனைவருக்கும் நன்றி, வணக்கம் என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசியதாவது….
இயக்குநர் தீரன் அருண்குமார் இந்தப்படத்தின் கதையைச் சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.‘பிளாக் கோல்டு’ என்ற தலைப்பைக் கேட்டதும் மிளகு அல்லது நிலக்கரி என்று நினைக்கலாம்.ஆனால் அதைத்தாண்டி தலைமுடியை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதைக்களம் இதில் இருக்கிறது.தலைமுடியைச் சுற்றியுள்ள வணிகம்,அரசியல் எனப் பல விஷயங்களைப் படத்தில் பேசியிருக்கிறார்கள்.சாதாரணமாக நாம் ஒரு விஷயமாகக் கடந்து செல்லும் தலைமுடிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய அறிவியல் மற்றும் வணிகப்பின்னணி இருப்பது ஆச்சரியமாக இருந்தது.அதைப்பற்றி மேலும் படிக்கவும் ஆராயவும் இந்தப்படம் தூண்டியது.
இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன்.இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.அவர் இசையமைத்த மெட்டுக்கு ஏற்ப வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பொருத்தி எழுத வேண்டியிருந்தது.குறிப்பாக, ‘தினம் தினம் நீ பார்க்கும் வரம் வாங்குவேன்,மனதினில் அதை கோர்த்து உனைத் தாங்குவேன்’ என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.அதேபோல்,‘வெங்காட்டு பூமியிலே’ பாடலும் ஒரு கதையைச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.
அந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘வெங்காட்டு பூமியிலே புழுதிக்காற்று வீசுது,வெஞ்சோகம் நெஞ்சிலே பெருகிப் பாயுதே’,‘மண்ணாளும் போகும் ஈரம் எழுதில் காய்வதில்லை,நெஞ்சோடு வாழும் நேசம் வலியில் வீழ்வதில்லை’ போன்ற வரிகளை எழுதியது மனநிறைவாக இருந்தது.மேலும்,‘பொல்லாத ஊருக்குள்ள சந்தேகம் குறையவில்லை,சொல்லாத விடுகதையில் விடை தெரியல ஏனோ’ என்ற வரிகளும் படத்தின் மர்மமான கதைக்களத்துடன் பொருந்தும்.
தலைமுடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் இரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் பல திருப்பங்களையும் கொடுக்கும்.நடிகர் வெற்றிக்கு இப்படம் வெற்றிப்படமாக அமையவேண்டும்.இயக்குநர் தீரன் அருண்குமார், இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.இந்தப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி.நன்றி என்றார்.
ஜே.ஆர்.ரமேஷ் பேசியதாவது…..
ஊடக நண்பர்கள்,பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இயக்குநர் தீரன் அருண்குமார் எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பழக்கம்.அவ்வப்போது சந்தித்து அடுத்ததாக என்ன படம் செய்யப்போகிறீர்கள் என்று பேசிக்கொள்வோம்.
என்னுடைய அடிப்படைத் தொழில் தினமலர் விநியோகஸ்தராக இருப்பதுதான்.திரைப்பட விநியோகம் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.தீரன்,படம் எடுக்கப்போகிறேன் என்று கூறியபோது,என்ன படம் எடுக்கப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன்.
அவருடைய அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வந்த நிலையில்,இந்தப்படத்தின் விநியோகப் பணிகளிலும் என்னால் ஈடுபட முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.‘பிளாக் கோல்டு’ படத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விநியோகஸ்தர் ஆதவா பேசியதாவது….
இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘பிளாக் கோல்டு’ படத்தின் விநியோக உரிமையை எங்களுக்கு வழங்கிய தயாரிப்பாளர் மூர்த்தி சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது நண்பர் இயக்குநர் தீரன் அருண்குமார் ஏற்கெனவே வெற்றியைச் சந்தித்துள்ளார்.இந்தப்படமும் வெற்றிபெற ஊடக நண்பர்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ படத்தில் இடம்பெறும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது.நம்முடைய முன்னோர்கள் காற்றையும் கடலையும் நம்பி வாழ்ந்தவர்கள் என்பதால்,அவை ஒருபோதும் நம்மைக் கைவிடாது என்ற கருத்து அதில் இடம்பெற்றிருக்கும். அதேபோல்,தீரன் அருண்குமார் சினிமாவைத் தனது மூச்சாகச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.எனவே,இந்தத் திரையுலகமும் ஊடகங்களும் அவரைக் கைவிடாது என்று நம்புகிறேன்.அவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை வழங்க என்னுடைய வாழ்த்துகள்.
மேலும்,தயாரிப்பாளர் மூர்த்தி சாரைப் பற்றியும் குறிப்பிடவேண்டும்.‘ஜெயிலர் 2’ படத்தில் மூர்த்தி என்ற பெயர் பேசப்பட்டது.ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை அனைத்தும் எங்களுடைய மூர்த்தி அண்ணன்தான்.அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுகிறோம்.‘பிளாக் கோல்டு’ திரைப்படம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தரவேண்டும்.நன்றி என்றார்.
இப்ராஹிம் பேசியதாவது….,
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நான் சென்னைக்கு ஒரு வியாபார விஷயமாக வந்திருந்தபோது,ரமேஷ் சார் என்னைச் சந்தித்து,இயக்குநர் தீரன் அருண்குமார் தனது நண்பர் என்றும்,அவர் ஒரு நல்லபடம் இயக்கியிருப்பதாகவும் கூறி பார்க்க அழைத்தார்.அப்போது நேரமில்லாததால் என்னால் பார்க்க முடியவில்லை.பின்னர் இயக்குநர் தனது முதல்படமான ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தை எனக்கு அனுப்பி வைத்தார்.சத்யராஜ் நடித்த அந்தப்படத்தைப் பார்த்தபோது,ஒவ்வொரு காட்சியும் இரசிக்கும்படியாக இருந்தது.
எனக்கு இப்போது 60 வயதாகிறது.என்னுடைய 21 வயதில் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு சென்னைக்கு வந்தேன்.ஆனால் சினிமாவில் நுழையமுடியாமல் பல கஷ்டங்களைச் சந்தித்தேன்.கையில் இரண்டுரூபாய் கூட இல்லாமல்,பேருந்தில் பயணம் செய்யக்கூட முடியாத சூழ்நிலையிலும் இருந்திருக்கிறேன்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கே திரும்பிச் சென்றேன்.இருந்தாலும் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற ஆசையை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை.
இப்போது மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கிறேன்.எனக்கான தகுதியையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டு,இயக்குநர் தீரன் அருண்குமாருடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்.‘பிளாக் கோல்டு’ படத்தின் விநியோக உரிமையையும் பெற்றிருக்கிறேன்.நிச்சயமாக நானும் திரைப்படங்களைத் தயாரிப்பேன்.சினிமா என்னை வாழவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.என்னைப்போல சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு,பல கஷ்டங்களால் ஊருக்குத் திரும்பியவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டும்.ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து,அதை வாழவைக்கும் சக்தி பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்களின் கைகளில்தான் இருக்கிறது.என்னைப் போன்றவர்களின் முயற்சிகளுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.நன்றி,வணக்கம் என்றார்.
ஜனீஷ் பேசியதாவது….
தயாரிப்பாளர் மூர்த்தி சார் மிகவும் நேர்மையானவர்,வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் இருந்தபோதுதான் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.ஆனால் படத்தின் வெளியீடுவரை எங்களுடன் பயணிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் தொடர்ந்து ஆதரவளித்தார்.இந்தப்படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்கள். பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களுடைய ஆரம்பகட்டப் பயணத்தில் இருந்தாலும்,அனைவரும் தங்களால் முடிந்த சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.இயக்குநர் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த மெனக்கெடல் எடுத்திருப்பது படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.இந்தப்படம் இயக்குநருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெற்றுத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஏ.வெங்கடேஷ்,லிவிங்ஸ்டன் உள்ளிட்ட அனுபவமிக்க கலைஞர்களிலிருந்து வெற்றிவரை அனைவரும் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.இந்தப்படம் இரசிகர்களுக்குச் சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.ஒரு கருத்தைச் சொல்வதைத் தாண்டி,முழுமையான பொழுதுபோக்குப் படமாகவும் நிச்சயம் இருக்கும்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாக் கோல்டு’ படத்திற்கு திரையரங்குகள் மட்டுமின்றி மற்ற வணிகப்பிரிவுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தப்படத்தின் வெற்றிக்கு ஊடகநண்பர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும்.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் ஜப்பான் குமார் பேசியதாவது….
இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் தீரன் அருண்குமார் என்னை அழைத்துப் பேசினார்.நான் இதுவரை சிறிய காமெடி கதாபாத்திரங்களில்தான் நடித்துவருகிறேன் என்று கூறினேன்.ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.அவருடைய நம்பிக்கைக்காகவே இந்தப்படத்தில் நடிக்கச் சம்மதித்தேன்.
இந்தப்படம் எப்படி வந்திருக்கிறது என்பதைவிட,படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால்,இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஊடகநண்பர்களும் இரசிகர்களும்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும்.
இப்போதெல்லாம் சிறிய படங்கள் நன்றாக இருந்தாலும்,திரையரங்குகளில் அவற்றைப் பார்க்க இரசிகர்கள் வருவது குறைவாக இருக்கிறது.சிலநேரங்களில் நல்லபடங்களாக இருந்தாலும் விரைவிலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு விடுகின்றன. எனவே,‘பிளாக் கோல்டு’ படத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் கராத்தே வெங்கடேஷ் பேசியதாவது….
இந்தப்படக்குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த கலைஞர்கள்,இளம் கலைஞர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இயக்குநர் தீரன் அருண்குமார் என்னிடம் முதலில் கதையைச் சொன்னபோதே,எனக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்திருந்தார்.குறிப்பாக,உயிரைப் பறிக்கும் கதாபாத்திரமாக இருந்தால்தான் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூறினார்.
‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது.இயக்குநர் என்ன சொன்னாலும் அதைச்செய்யத் தயாராக இருக்கிறேன்.இந்தப்படத்திலும் இரண்டு,மூன்று உயிர்களை எடுத்திருக்கிறோம்.அதை இரசிகர்கள் திரையில் பார்த்து இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.அனைவரும் ‘பிளாக் கோல்டு’ படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.நன்றி என்றார்.
நடிகர் டெலிபோன் ராஜ் பேசியதாவது….
எல்லாப் படங்களுக்கும் படப்பிடிப்புக்குச் செல்வதைப் போலத்தான் இந்தப்படத்திற்கும் சென்றேன்.ஆனால்,இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது.ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும்,அதில் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது.இயக்குநர் தீரன் அருண்குமார் மிகவும் பொறுமையாக,ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல எனக்குக் காட்சிகளை விளக்கிக் கொடுத்தது மிகவும் பிடித்திருந்தது.
படப்பிடிப்பிலும் டப்பிங் பணியின்போதும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.ஒவ்வொரு நடிகரையும் அந்தந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.சில கதாபாத்திரங்களின் தோற்றத்தைப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது.அந்த அளவுக்கு ஒவ்வொருவருடைய தோற்றமும் கதாபாத்திரங்களும் வித்தியாசமாக அமைந்துள்ளன.
நடிகர் வெற்றியைப் பார்க்கும்போது மிகவும் மென்மையான,சாக்லேட் பாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.அவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன.அந்தவரிசையில்‘பிளாக் கோல்டு’படமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் மூர்த்தி மிகவும் நல்ல மனிதர்.எனக்கும் நல்லமுறையில் சம்பளம் வழங்கினார்.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.ஊடகநண்பர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும்.நன்றி என்றார்.
நடிகை சபீதா ராய் பேசியதாவது….
இங்கு வந்திருக்கும் திரைப்பட உறவுகளுக்கும்,பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பல ஆண்டுகளாக சினிமாவை நேசித்து,அதில் ஒரு நல்ல வாய்ப்புக்காகப் போராடி வருகிறேன்.அந்தவகையில்‘பிளாக் கோல்டு’திரைப்படம் எனக்கு ஒரு முக்கியமான மேடையாக அமைந்துள்ளது.இந்தப்படத்தில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப்படத்திற்குப் பிறகு மல்லி என்ற கதாபாத்திரத்தின் மூலம் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமாருக்கு எனது மனமார்ந்த நன்றி.
இயக்குநர் தீரன் அருண்குமார் ஒரு சிறந்த கேப்டன்.எவ்வளவு பரபரப்பான சூழ்நிலையாக இருந்தாலும் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்படுவார்.படப்பிடிப்புத்தளத்தில் அனைவரையும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்.அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமியின் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது.தமிழ்சினிமாவில் அவர் முக்கியமான ஒளிப்பதிவாளராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நடிகர் வெற்றி படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் இருப்பார்.ஆனால் கேமரா முன்பு நடிக்கும்போது அவருடைய நடிப்பும் ஹீரோயிசமும் வியக்கவைக்கும்.நடிகர் ஏ.வெங்கடேஷுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.இந்தப்படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.அதேபோல்,என்னுடைய கதாபாத்திரத்துடன் தொடர்புடைய நைனா கதாபாத்திரத்தில் நடித்த அருள்சங்கருடனும் நல்ல நட்பு உருவாகியுள்ளது.தயாரிப்பாளர் மூர்த்தி போன்ற ஆதரவான தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவுக்குக் கிடைப்பது உண்மையிலேயே ஒரு வரம்.இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ்,பாடலாசிரியர் மோகன் ராஜா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
சிறியபடம்,பெரிய படம் என்று இனிமேல் படங்களைப் பிரித்துப் பார்க்கவேண்டாம்.சிறியபடங்கள்தான் இன்றைக்குப் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றன.நல்லகதையும் உழைப்பும் இருந்தால் எந்தப்படமும் பெரியவெற்றியைப் பெறமுடியும்.‘பிளாக் கோல்டு’ படமும் இரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.நன்றி என்றார்.
இயக்குநரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் பேசியதாவது….
இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப்படத்தை வெளியிடும் ஆதவா,ரமேஷ்,ஆகியோருக்கு முதலில் நன்றி.
‘பிளாக் கோல்டு’ முழுக்க முழுக்க இயக்குநர் தீரன் அருண்குமாரின் படைப்பு.ஒருநாள் செய்தித்தாளில் தலைமுடி தொடர்பான ஒரு செய்தியைப் படித்தபோது,அதைவைத்து ஒரு திரைப்படம் உருவாக்கலாம் என்று நான் நினைத்தேன்.சில நாட்களுக்குப் பிறகு தீரன் இந்தப்படத்தின் கதையைச் சொன்னபோது,நான் படித்த அதேசெய்தியின் பின்னணியில் கதையை உருவாக்கியிருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.இதுவரை தமிழ்சினிமாவில் பேசப்படாத ஒரு விஷயத்தைப் புதுமையான முறையில் அணுகியிருக்கிறார்.‘பிளாக் கோல்டு’ என்ற தலைப்பும் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியமானது சரியான நடிகர் தேர்வு.அந்தவகையில் தீரன் இந்தப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார்.குறிப்பாக,அருள் டி.சங்கர் உள்ளிட்ட நடிகர்களின் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளது. அபிராமி,சபீதா ராய்,ஜப்பான் குமார் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கதாநாயகன் வெற்றி மிகவும் அமைதியானவர்.ஆனால் கேமரா முன்பு அவருடைய நடிப்பு வியக்கவைக்கும்.என்னுடன் இணைந்து நடித்த காட்சியிலும் மிகக்குறைவான ரியாக்ஷன்களைக் கொண்டே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமி,தயாரிப்பின் தேவைகளையும் இயக்குநரின் எதிர்பார்ப்பையும் சமநிலைப்படுத்தி சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.எடிட்டர் தினேஷ்குமாரின் பணியும் சிறப்பாக உள்ளது.இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் இசையிலும் பாடல்களிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்.பாடலாசிரியர் மோகன்ராஜாவின் வரிகளும் குறிப்பிடத்தக்கவை.
தயாரிப்பாளர் மூர்த்தி சாருக்கு நன்றி சொல்வதுடன்,இந்தப்படத்தை உருவாக்குவதற்கு ஊக்கமளித்த அவரது மனைவி மற்றும் மகளுக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும்.அவர்களுடைய ஆதரவும் இந்தப்படம் உருவாக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. இயக்குநர் தீரன் இந்தப்படத்திற்காக ஆரம்பம் முதல் இன்றுவரை எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.இது அவருக்கு இரண்டாவது படம் என்றாலும்,முதல்படம் போலவே மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார். படத்தின் உருவாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
நான் இன்னும் முழுப்படத்தையும் பார்க்கவில்லை.எனது காட்சிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன்.இருந்தாலும் கதையின் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.இறைவனின் அருளாலும்,இயற்கையின் துணையாலும்,ஊடகநண்பர்கள் மற்றும் இரசிகர்களின் ஆதரவாலும் ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் இரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் அருள் டி.சங்கர் பேசியதாவது….
சினிமாவில் எனது 16 ஆண்டுகால பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.ஆனால் ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம்.ஒரு டூயட் பாடல் இல்லாமல்,என்னை எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் வெளிப்படுத்துங்கள் என்று இயக்குநர் தீரணிடம் கூறினேன்.அதற்கேற்றவகையில் நைனா ராஜா என்ற கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.இதுவரை ஊடகங்களிடம் எனக்காக எழுதும்படி கேட்டதில்லை.ஆனால் முதல்முறையாக,இந்தப்படத்தில் எனது நடிப்பு நன்றாக இருந்தால் அதைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தயாரிப்பாளர் மூர்த்தி ஒரு சிறந்த தயாரிப்பாளர்.முறையான திட்டமிடலும்,சினிமா மீதான கலை உணர்வும் கொண்டவர்.படத்தை ஒரு நடிகராகத் தொடங்கி இந்தநிலைக்குக் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.உடன் நடித்த ஷீபானு,சபீதா ராய்,ஏ.வெங்கடேஷ், வெற்றி,டெலிபோன் ராஜ்,ஜப்பான் குமார் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக வெற்றி மிகவும் அமைதியான, நேர்மையான மனிதர்.ஒரு கதாபாத்திரத்தின் எல்லையைத் தாண்டி அவர் தலையிடுவதில்லை.இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதைச் செயல்படுத்துவதுதான் தனது வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார்.ஏ.வெங்கடேஷ் சாரின் நடிப்பும்,சகநடிகர்களுடன் பணியாற்றிய அனுபவமும் மகிழ்ச்சியாக இருந்தது.கவாஸ்கர் அவினாஷின் இசையில் ‘வெங்காட்டு’ பாடல் மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப்படத்தில் எனக்கு நைனா ராஜா கதாபாத்திரம் கிடைத்ததே ஒரு சுவாரசியமான அனுபவம்.மாதங்கி மூலம் இயக்குநர் தீரன் அறிமுகமானார்.அவருடைய முந்தைய படத்தைப் பார்த்த பிறகு,ஆறு மாதங்கள் கழித்து என்னை அழைத்துக் கதை சொன்னார். கதாபாத்திரத்தின் தோற்றம் முதல் நெற்றியில் வைக்கும் செந்தூரம்,அணியும் ஆபரணங்கள் வரை ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு உருவாக்கியிருந்தார்.அந்தத் தோற்றத்திற்காக மேக்கப் கலைஞர் உமாசங்கருடன் இணைந்து பல முயற்சிகள் மேற்கொண்டோம்.சண்டைக்காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர் மெட்ரோ மகேஷிடம் ஏழுநாட்கள் முறையான பயிற்சியும் பெற்றேன். இயக்குநரும் உதவிஇயக்குநர்களும் பயிற்சியின்போது உடனிருந்து ஊக்கமளித்தது மறக்கமுடியாத அனுபவம்.
இயக்குநர் தீரனின் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு இயல்பாகவும்,எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலும் அவர் எழுதியிருக்கிறார்.படத்தின் முன்திட்டமிடலும் மிகச்சிறப்பாக இருந்தது.குறைந்த கால்ஷீட்டில் பல காட்சிகளைப் படமாக்கியிருப்பது அவரது திட்டமிடலுக்குச் சான்று.சில கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் படக்குழுவினர் மிகுந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.எனது கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.இயக்குநர் தீரன் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்சினிமாவின் முன்னணி மூன்று இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.இந்தப்படத்திற்கும் எனது நடிப்பிற்கும் ஊடகங்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.நன்றி என்றார்.
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கலை பேசியதாவது….
தயாரிப்பாளர் மூர்த்தி சார் பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைச் சொல்லியும்,அதன் வித்தியாசமான களத்தைக் கருத்தில் கொண்டு யாரும் தயாரிக்க முன்வரவில்லை.அப்போது இயக்குநர் தீரன் அருண்குமார் எங்களிடம் வந்து கதையைச் சொன்னார்.கதை பிடித்திருந்ததால் மூர்த்தி சார் தனது மனைவி,மகளிடம் ஆலோசித்து இப்படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தார்.அதன் விளைவாகத்தான் இன்று ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் உங்கள் முன்னால் நிற்கிறது.படத்தின் தலைப்புக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்பதைப் படம் பார்க்கும்போது தெரிந்துகொள்வீர்கள்.
நடிகர் வெற்றி படப்பிடிப்புக்கு எப்போதும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து தயாராகக் காத்திருப்பார்.ஏ.வெங்கடேஷ்,கராத்தே வெங்கடேஷ்,ஸ்ரீபா,கிருஷ்டி,அருள் டி.சங்கர், வியாழக்காரன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள். இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மூன்று பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார்.ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் தனது முதல்படமாக இருந்தாலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.எடிட்டர் தினேஷ் மற்றும் இயக்குநர் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினர்ஸ்டண்ட் மாஸ்டர் மெட்ரோ மகேஷ்,நடன இயக்குநர் ரிச் சாம்சன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகரும் தயாரிப்பாளருமான மூர்த்தி சார் எப்போதும் நேர்மறையாகப் பேசக்கூடியவர்.இயக்குநர் கேட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்து,படத்தின் உருவாக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தார்.இயக்குநர் தீரன் அருண்குமார் இந்தப்படத்தின் கதையை எழுதி, திரைக்கதை,வசனம் அமைத்து இயக்கியிருக்கிறார்.படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒரேநேரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்றபோதும்,அவர் பைக்கிலேயே ஒவ்வொரு இடத்திற்கும் சென்று தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இருந்து பணிகளைச் செய்து முடித்தார்.அந்த அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறார்.அவருக்கும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அனைவரையும் சந்திப்போம்.நன்றி,வணக்கம் என்றார்.
நடிகை அபிராமி பேசியதாவது….
ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலான விஷயம்.அந்தக் கதாபாத்திரத்தை அபிராமி மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார் என்று பாராட்டிய அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது,வெற்றி நடிக்கிறார் என்று தெரிந்ததும் கதை நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.இயக்குநர் தீரன் கதையை மிகவும் தெளிவாகவும் வித்தியாசமாகவும் விளக்கினார்.ஒரு அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துவது போல அவ்வளவு நேர்த்தியாகக் கதையை எடுத்துச்சொன்னார்.
முன்பு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உறுதியாகும் என்று எதிர்பார்த்தும்,கடைசி நேரத்தில் கைநழுவிய அனுபவங்கள் எனக்கு இருந்திருக்கின்றன.அதனால் இந்தப்படத்திலும் எனது கதாபாத்திரம் உறுதியாக இருக்கிறதா என்று பலமுறை இயக்குநரிடம் கேட்டேன்.ஆனால் அவர் என்மீது முழு நம்பிக்கையுடன் இருந்தார்.இந்தக் கதாபாத்திரத்திற்கு அபிராமிதான் நடிக்கவேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் உறுதியாக முடிவெடுத்து என்னை அழைத்தது ஒரு நடிகையாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.அதற்காக இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும்,எனது பயணத்தையும் ஊடகங்கள்தான் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன.அடுத்தபடம் எப்போது,ஏன் புதியபடங்களில் நடிக்கவில்லை என்று தொடர்ந்து கேட்டு எனக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்.அதற்காக அனைவருக்கும் நன்றி.‘பிளாக் கோல்டு’ திரைப்படம் வெளியாகும்போதும் ஊடகநண்பர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கவேண்டும்.உங்கள் ஆதரவின் மூலம்தான் எங்களைப் போன்ற கலைஞர்கள் தொடர்ந்து வளரமுடியும் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் தீரன் அருண்குமார் பேசியதாவது….
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே அரங்கில் உங்களைச் சந்திப்பது,காணாமல் போன குழந்தை மீண்டும் கிடைத்தது போன்ற உணர்வைத் தருகிறது.எனது முதல்படமான ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் உங்களைச் சந்தித்தேன்.தற்போது எனது இரண்டாவதுபடமான ‘பிளாக் கோல்டு’மூலம் மீண்டும் உங்கள் முன்னால் நிற்கிறேன்.முதல்படத்திற்குப் பிறகு அடுத்தபடத்திற்கான முயற்சியில் இருந்தபோது,தெலுங்கில் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கான கதையைச் சொல்லியிருந்தேன்.சில கட்டங்களைக் கடந்தும் அந்தப்படம் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது.அதனால் தமிழுக்கே திரும்பி,புதுமையான ஒரு கதையைத் திரைப்படமாக உருவாக்க முடிவுசெய்தேன்.பல தயாரிப்பாளர்களிடம் கதையைச் சொன்னபோதும் யாரும் துணிவாக முன்வரவில்லை.மலையாள சினிமா போல வித்தியாசமான கதைகளுக்கான வரவேற்பு தமிழிலும் இன்னும் அதிகரிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.அந்தச்சூழலில்தான்‘பிளாக் கோல்டு’உருவானது.
இந்தப்படத்திற்கு வெற்றியைத் தேர்வு செய்ததற்குக் காரணம்,குறைந்த பட்ஜெட்டிலும் குறைந்த நாட்களிலும் பணியாற்றக்கூடிய அதேநேரத்தில் கதைக்கு ஏற்ற கதையின்நாயகனாக அவர் இருப்பார் என்று நம்பியதுதான்.அவரிடம் கதையைச் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார்.படத்தின் நாயகி உடல்நலக்குறைவால் இன்றைய நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை.அபிராமி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.அருள்டி.சங்கர் நடித்த சுருள் ஆயுதச்சண்டைக்காட்சிக்காக எட்டு முதல் ஒன்பது நாட்கள் பயிற்சி அளித்தோம்.படத்தில் சுமார் ஒன்றரைநிமிடம் மட்டுமே வரும் அந்தக்காட்சிக்காகவும் அவர் கடுமையாக உழைத்தார்.அதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் “மெட்ரோ” மகேஸ் மாஸ்டருக்கு நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.ஏ.வெங்கடேஷ் போன்ற அனுபவமிக்க கலைஞர் எங்களுடன் மிகவும் நட்பாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றியது மகிழ்ச்சி.சபீதா ராய்,கராத்தே வெங்கடேஷ்,ஜப்பான் குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.குறிப்பாக ஜப்பான் குமாருக்கு வசனங்கள் இல்லாத கதாபாத்திரம்.பேசாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிதான விஷயமல்ல;அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்தின் தரத்தைத் தீர்மானிப்பதில் ஒளிப்பதிவாளர்,எடிட்டர்,இசையமைப்பாளர் ஆகிய மூவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் தனது முதல்படத்திலேயே சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.எடிட்டர் தினேசிற்கும் எனக்கும் நல்லபுரிதல் இருந்ததால் படத்தைச் சிறப்பாக முடிக்கமுடிந்தது.இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷும் படத்திற்கு மிகவும் வலுசேர்த்துள்ளார்.எனது நண்பர் ராம் பல ஆண்டுகளாகப் பழக்கமானவர்;அவரையும் இந்தப்படத்தின் மூலம் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.புதியகலைஞர்களை நம்பி வாய்ப்பளிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.படத்தைப் பார்த்தவர்கள் நல்லமுறையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.ஆனால் இறுதித்தீர்ப்பு நவம்பர் 13ஆம் தேதி படம் வெளியாகும்போது இரசிகர்களிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும்தான் கிடைக்கும்.சிறிய படம்,பெரிய படம் என்ற பிரிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. கதையின் உள்ளடக்கம்தான் ஒருபடத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது.நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தமிழ்இரசிகர்கள் எப்போதும் ஆதரித்திருக்கிறார்கள்;அதே ஆதரவை எங்களுக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் மூர்த்தி சார்தான்.ஆரம்பம் முதல் இன்றுவரை அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல்,மிகப்பெரிய சினிமா இரசிகராகவே என்னுடன் பயணித்திருக்கிறார்.படத்தில் வரும் காட்சிகள்,வசனங்கள் என அனைத்தையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்வார்.அதிகாலை ஐந்து மணிக்குப் படப்பிடிப்பை முடித்துவிட்டுச் சென்றாலும், அன்றைய படப்பிடிப்பு எப்படி நடந்தது,காட்சிகள் நன்றாக வந்ததா என்று விசாரிப்பார்.இப்படிப்பட்ட சினிமா மீதான ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவுக்கு மிகவும் அவசியம்.பணம் இல்லாமல் பல நல்லகதைகள் திரைப்படமாக முடியாமல் நிற்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் எனக்கு மூர்த்தி சார் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.எனது வெற்றியை விட அவர் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்.அவர் வெற்றி பெற்றால் என்னைப்போன்ற பல புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பளிக்க முடியும்.இந்தப்படத்தின் தொடக்கத்திலிருந்து பல தடைகளைச் சந்தித்தோம்.படம் பாதியில் நின்றுவிடும்,அடுத்தகட்டத்திற்குச் செல்லாது,வியாபாரம் ஆகாது என்று பலரும் கூறினார்கள்.ஆனால் ஒவ்வொரு தடையையும் கடந்து படத்தை முடித்தோம்.தற்போது வியாபாரமும் முடிந்து,திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறோம்.
இந்தப்படத்தைத் தொடங்கியதும் இதே வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் சிறிய பூஜை நடத்தினோம்.அப்போது இந்தப்படம் நிற்கும் என்று கூறியவர்கள் பலர் இருந்தார்கள்.ஆனால் இன்று அனைத்துத்தடைகளையும் கடந்து உங்கள் முன்னால் வந்திருக்கிறோம். படத்தின் அடுத்தகட்ட விளம்பரப் பணிகளையும் தொடங்கவிருக்கிறோம்.எங்கள் குழுவினர் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பைக் கொடுத்து ஒரு கட்டடத்தைச் செங்கல் செங்கலாக உருவாக்குவது போல இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.அதன் வெற்றியைத் தீர்மானிப்பது உங்கள் ஆதரவுதான்.நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் ‘பிளாக் கோல்ட்’ படத்தைப் பார்த்து எனது உழைப்பும்,எங்கள் குழுவின் முயற்சியும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.மீண்டும் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொண்டாட்டத்தில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
நடிகர் வெற்றி பேசியதாவது….
‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம்.பொதுவாக பிளாக் கோல்டு என்றால் கச்சா எண்ணெய் அல்லது மிளகு என்று பலரும் நினைக்கலாம்.ஆனால் இந்தப்படத்தில் நாங்கள் குறிப்பிடுவது மனிதர்களின் தலைமுடியைத்தான்.தலைமுடிக்குப் பின்னால் ஒவ்வொருநாளும் நடைபெறும் மிகப்பெரிய வணிகமும்,அதன் பின்னணியில் இயங்கும் வலையமைப்பும்தான் இந்தப்படத்தின் கதைக்களம்.இந்தப்பின்னணியில் ஒரு குடும்பக்கதையையும்,அப்பா – மகன் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவையும் இணைத்து இயக்குநர் தீரன் உருவாக்கியிருக்கிறார்.
இந்தக்கதையை முதன்முதலில் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.வித்தியாசமான கதைக்களத்துடன் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளது.இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள்,சக நடிகர்கள், இயக்குநர் குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘பிளாக் கோல்டு’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் படத்தைப் பார்த்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.எப்போதும் அளிக்கும் ஆதரவைப் போல இந்தப்படத்திற்கும் ஊடகநண்பர்களும் இரசிகர்களும் ஆதரவு தரவேண்டும்.நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.











