சினிமா செய்திகள்

மணிரத்னம் விஜய்சேதுபதி ஏ.ஆர்.ரகுமான் படம் – தொடங்குமுன்பே பெரும் வியாபாரம்

தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார்.

இதை நடிகர் விஜய்சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.அவர் கொடுத்த ஒரு பேட்டியில்….

நான் ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் மணி சாருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்தமுறை நாங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்கிறோம்.மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தைச் செய்வது எனக்கு மரணத்தை போன்றது. நான் ரீமேக்கோ,இரண்டாம்பாகமோ எப்போதும் செய்யமாட்டேன். கலைஉலகை ஒன்றிணைக்கிறது.நான் அந்த உலகின் ஒரு சிறியபகுதி.நான் எந்த உத்தியையும் பின்பற்றுவதில்லை.என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதில் எனக்கு கட்டுப்பாடு உண்டு என நம்புவேன்,ஆனால் நாம் வாழ்க்கையில் எதையும் கட்டுப்படுத்த மாட்டோம்.
நான் எதையும் திட்டமிடுவதில்லை. என் நடிப்பில் கூட ஒரு நீரோட்டம் போல செல்ல விரும்புகிறேன். திரையில் வேறொருவராக மாறுவது எளிதானது அல்ல.சிறிய வேடங்களைத் தேடித் திரைத்துறையில் நுழைந்த விஜய்சேதுபதி இன்னும் உயிருடன் இருக்கிறார். மணிரத்னத்துடன் பணிபுரிந்தாலும் அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.நான் சினிமாவுக்கு வந்தபோது செய்ய விரும்பியது,​​கேமரா முன் நின்று என் வசனங்களைச் சொல்வதைதான்.இன்றும் கூட,நான் கேமரா முன் இருக்கும்போது மிகவும் உயிர்ப்போடு உணர்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

இதுதான் இப்படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லையெனினும் படப்பிடிப்புக்கு முன்பான பணிகள் மிக வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது என இப்போது சொல்லப்படுகிறது.அதேநேரம், இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை வேறொரு பெரிய நிறுவனம் ஏற்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.அவருடைய இசையில் படத்துக்குத் தேவையான பாடல்பதிவு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன என்றும் சொல்கிறார்கள்.

இந்நிலையிலேயே இப்படத்தின் முக்கிய வியாபாரங்கள் அதற்குள் நடந்து முடிந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

முதன்மையாக இப்படத்தின் பாடல் உரிமையை சுமார் பதினைந்து கோடிக்கு ஒரு பெரிய நிறுவனம் பெற்றிருக்கிறதாம்.மணிரத்னம் ஏ.ஆர்.ரகுமான் இணைவில் உருவாகும் படம் என்பதும் அதனால் பாடல்கள் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதால் இவ்வளவு விலைக்கு விற்பனையாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டு விநியோக உரிமையை எங்களுக்கே கொடுக்கவேண்டுமென ஒரு பெரியநிறுவனம் பேசிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

நல்லசெய்திதான்.

Related Posts