சினிமா செய்திகள் நடிகர்

நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள் – சிம்பு வெளிப்படை

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார்.

அப்போது, கன்னட மக்கள் நல்லவர்கள் என்பது போலப் பேசியிருந்தார். அதனால் அவருக்குக் கடும் விமர்சனங்கள் வந்தன. சிம்பு தமிழனா? என்று கேள்வியெழுப்பும் அளவுக்குப் போனார்கள். இதனால் சிம்பு மனவேதனை அடைந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) தந்தி தொலைக்காட்சியில் அவர் கொடுத்த பேட்டியில் இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, நான் சொல்லியது தவறு என்று மக்கள் கருதினால் அதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்று கையெடுத்துக் கும்பிட்டார்.

Related Posts