November 5, 2025
சினிமா செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி – புதிய தகவல்கள்

தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து,இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம்.

அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து அப்படத்தை எடுக்கத் திட்டமிட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

இப்போது அந்த முடிவையும் கைவிட்டுவிட்டார் என்று சொல்கிறார்கள்.

ஏனெனில், அவர் ஒரு படத்தைத் திட்டமிடும்போதே அதன் வியாபார வாய்ப்புகளையும் பார்த்தே செயல்பாட்டைத் தொடங்குவார்.

இப்போதுள்ள வியாபார சூழலில் மணிரத்னம் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படமென்றால் அதை வாங்க ஆளே இல்லையெனும் நிலை.

அதனால் சத்தமின்றி அந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டு கதாநாயகர்களைத் தேடியிருக்கிறார்.

தக்லைஃப் படம் நடக்கும்போதே, சிம்புவை வைத்து ஒரு படம் மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் சொல்லப்பட்டது.

சிம்பு தொடர்ந்து வேறு படங்களில் நடிக்கவிருந்ததால் அது நடக்கவில்லை.

இப்போது, சிம்பு திட்டமிட்டபடி நடக்காமல் சில மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால் மீண்டும் அவரை அணுகியிருக்கிறார் மணிரத்னம்.

அவரோ, முதலில் வெற்றிமாறன் படம் அடுத்தடுத்து ஏற்கெனவே அறிவித்த படங்கள் இருக்கின்றன. எனவே உடனே உங்கள் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டாராம்.

அதன்பின்,சில கதாநாயகர்களிடம் பேசிவிட்டு அவையும் கைகூடாத நேரத்தில் விஜயசேதுபதியிடம் பேசியிருக்கிறார்.

அவர் கதை என்ன? என்று கேட்டிருக்கிறார். சிம்புவுக்காக எழுதியிருந்த கதையை விஜய்சேதுபதியிடம் சொல்ல,அவருக்கு அந்தக் கதை பிடித்துவிட்டதாம்.

உடனே, அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டாராம் மணிரத்னம்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த்திடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அந்தப் பேச்சுகள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு இந்தப்படத்தை தன்னுடைய நிறுவனத்திலேயே தயாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.

அதேநேரம்,இவருக்கு நல்ல இலாபம் கிடைக்கிற மாதிரி இவர் சொல்கிற தொகையைக் கொடுக்க ஏதாவதொரு தயாரிப்புநிறுவனம் முன்வந்தால் அந்த நிறுவனத்துக்கு இந்தப்படத்தைக் கொடுத்துவிடுவார் என்று சொல்கிறார்கள்.

அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி என்பது மட்டும் எந்த மாற்றமும் இன்றி உறுதியாகியிருக்கிறது.

Related Posts