October 25, 2025
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போன்று புதிய அனுபவம் தருவோம் – விஷ்ணுவிஷால் உறுதி

இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில்,நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்கும் இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா அக்டோபர் 22 அன்று நடைபெற்றது.

இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் ஒரு பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்,

எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது…..

எனக்கு எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ, அதேபோல் ஆர்யன் முக்கியமான படம். பிரவீன் என் நண்பர் அவர்தான் இயக்குநர்,விஷ்ணு என் முதல்ஹீரோ, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தான்.பிரவீனும் நானும் கௌதம்மேனனிடம் ஒரேநாளில் வேலைக்கு சேர்ந்தோம்.சினிமாவை ஒன்றாக விவாதிப்போம்.விஷ்ணு விஷால் கதை கேட்டபோது நான்தான் பிரவீனை சிபாரிசு செய்தேன்.இந்தக்கதையை திரைக்கதையாக எழுத பிரவீன் அணுகியபோது மகிழ்ச்சியாக இருந்தது.மிக நல்ல திரைக்கதை.அக்டோபர் 31 படம் பார்க்கும் போது பிரவீன் திறமை உங்களுக்கு புரியும்.எஃப்.ஐ.ஆர் படத்தை பலர் தவிர்த்தபோது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால்.அவர் இந்தப்படத்தையும் நம்பி தயாரித்துள்ளார்.போலீசாக கலக்கியிருக்கிறார். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார்! ஷ்ரத்தாவும் சிறப்பாக செய்துள்ளார்.ஜிப்ரான் சார் அருமையான இசையைத் தந்துள்ளார்.எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும் என்றார்.

கலை இயக்குநர் ஜெயச்சந்திரன் பேசியதாவது..,

இந்தப்படத்தில் மிக முக்கியமான சீக்குவன்ஸ்க்காக ஒரு பெரிய செட் போட்டுள்ளோம். அனைவரும் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள். நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பேசியதாவது..,

ஆர்யன் மிக முக்கியமான படம், இதுவரை வந்த க்ரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தையே உடைத்து, புதிதாக ஒன்றை செய்துள்ளது.வில்லனின் ஆர்க்கையே முழுதாக மாற்றியுள்ள படம். விஷ்ணு சார் ஒருநாள் ராட்சசன் ஷீட்டில் பார்த்தபோது ஒரு ஷாட்டில் கண் சிமிட்டியிருக்கிறேன் அதைப்பார்த்து எடிட் செய்யுங்கள் என்றார்.அவரது அப்சர்வேசன் அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது.அவர் பணத்தைபற்றி எப்போதும் கவலைப்பட மாட்டார்.படம் சரியாக வரவேண்டும் என்பதில் கறாராக இருப்பார். சினிமாவை உண்மையாக காதலிக்கும் ஒருவர்.ஜிப்ரான் சார் எங்களுக்கு கிடைத்த வரம். செல்வா சாரின் காதல் கொண்டேன் படம் பார்த்து மிரண்டிருக்கிறேன்.இந்தப்படத்தில் அவர் கண்ணே பல விசயங்கள் பேசும்.படம் பார்த்தால் புரியும் அருமையாக நடித்துள்ளார்,படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,

எல்லோரிடமிருந்தும் ராட்சசன் மாதிரி இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது.ராட்சசன் எனக்கு முக்கியமான படம். ராட்சசனில் வில்லன் யார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கும்.அது இசையில் சவாலாக இருந்தது.இதில் வில்லன் யார் எனத் தெரிந்துவிடும்,ஆனால் அதன்பிறகுதான் கதை தொடங்கும்.செல்வா சார் நடிப்பிற்கு மியூசிக் செய்தது சந்தோசமாக இருந்தது.மியூசிக் நன்றாக தெரியக் காரணம் எடிட்டர் ஷான்தான்.எடிட்டிங்கில் இசைக்கு நன்றாக இடம் கொடுப்பார்.ரொம்ப கடினமான திரைக்கதையை மிக அழகாக சொல்லியுள்ளார் பிரவீன். வாய்ப்புத் தந்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. இந்தப்படத்துக்கு ஒரு சவுண்ட் செய்துள்ளேன், ராட்சசனில் இருந்து முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். இப்படம் ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் கருணாகரன் பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.ஓஹோ எந்தன் பேபி படத்தின் பாராட்டுக்களுக்கு நன்றி.ஆர்யன், ராட்சசன் கம்பேரிங்கை தடுக்கமுடியாது.ஆர்யன் எனக்கு பிடித்தபடம். பிரவீன் ரொம்ப காம்ப்ளிகேடட் கதையை பிரில்லியண்டாக எடுத்துள்ளார்.விஷ்ணு விஷால் போலீஸ் கதாப்பாத்திரத்தை மிக அட்டகாசமாக செய்துள்ளார். அவர் கடினமான உழைப்பாளி.தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை விஷ்ணுவுடன் இருந்து பார்த்தேன். இந்தப்படத்தில் நியூஸ் ரீடர் ரோல் செய்துள்ளேன், இருப்பதிலேயே கஷ்டமான ரோல்.செல்வா சாரின் மிகப்பெரிய ஃபேன்.அவர் மிகப்பெரிய ரோல் செய்துள்ளார்.எல்லோரும் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது..,

ஆர்யன் எனக்கு மிக முக்கியமான படம்.ஜிப்ரான் சார் இரசிகை நான்.அவர் பாடல்களைதான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.ஹரீஷ் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார்.செல்வா சார் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.ஷ்ரத்தா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.பிரவீன் சார் எனக்கு நல்லரோல் தந்ததற்கு நன்றி.விஷ்ணு விஷால் சாரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி. படம் அனைவரும் பாருங்கள் நன்றி என்றார்.

நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது..,

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். அக்டோபர் 31 எங்கள் படம் வருகிறது.என் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் சாருக்கு முதல் நன்றி.அவரை தயாரிப்பாளராகத்தான் முதலில் சந்தித்தேன்.அவர் இவ்வளவு உழைப்பைப் போட்டு இந்தப்படத்தை எடுத்துள்ளார்.அவர் தந்த ஊக்கத்திற்கும் என்னை தேர்ந்தெடுத்ததிற்கும் நன்றி.அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி.செல்வா சாருடன் ஷீட்டில் எதிரில் உட்கார்ந்திருந்ததே பயமாக இருந்தது.அவர் மீது பெரும் மரியாதை உள்ளது.பிரவீன் அற்புதமான கதைசொல்லி. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார்.ஜிப்ரான் சாரிடம் பெரிய திறமை உள்ளது.அவர் பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.ஹரிஷ் நல்ல விஷுவல்ஸ் தந்துள்ளார்.இது ஒரு க்ரைம் ஸ்டோரி, ஷான் சிறப்பாக எடிட் செய்துள்ளார்.மானசா உங்களுக்கு அழகுடன் திறமையும் இருக்கிறது வாழ்த்துகள். உங்களுடன் நானும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி என்றார்.

இயக்குநர் பிரவீன்.கே பேசியதாவது..,

இன்று நான் நானாக இருக்க காரணமான என் அப்பா அம்மா மற்றும் அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தின் எழுத்தாளர் மனு ஆனந்திற்கு நன்றி.எஃப் ஐ ஆர் படப்பிடிப்பின் போது உருவான கதை இது.எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாக புரிந்துகொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம்.எனக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம்.இந்தப்படத்தின் கதை கேட்ட தருணத்திலிருந்து அவர் இந்த கேரக்டரை, படத்தை எடுத்துச் சென்றவிதம் பிரமிப்பானது. இந்தக்கதையை ரவிதேஜா சார்,அமீர் சார் என பல நடிகர்களிடம் எடுத்து சென்றோம். இதை இந்தியிலும் செய்வதாக இருந்தது.பல தடைகள் வந்தபோதும் அவர் இப்படத்தை தாங்கினார்.இதற்காக அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது.இந்தப்படத்தை முழுதாக வேறுமாதிரி அணுகியிருக்கிறோம்.ஷ்ரத்தா மிக திறமையானவர், அவர் தான் இந்தரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். சிறப்பாக செய்துள்ளார்.மானசா நல்ல திறமைசாலி அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி.இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் இதன் தொழில்நுட்ப கலைஞர்கள். மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்தேன்,அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர்.ஜிப்ரான், ஷான், ஹரீஷ்,ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக செய்துள்ளனர்.எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி.படம் உங்களுக்கு சிறப்பான அனுபவம் தரும் என்றார்.

இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,

விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவரைச் சந்தித்ததில்லை.அவர் என்னை சந்தித்து,படம் செய்யவேண்டும் என அணுகி,அவருடன் வேலை பார்த்த போதுதான், அவரை பார்த்து பிரமித்தேன்.அவர் வீட்டுக்கே போகமாட்டார்.எப்போதும் சினிமாதான். சினிமாவை காதிலிக்கிற நேசிக்கிற,மதிக்கிற,ஹீரோ. அதேபோல் இயக்குநர் பிரவீன்,அவரும் அப்படித்தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும்.நன்றி என்றார்.

விஷ்ணு விஷால் பேசியதாவது..,

எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள்தான்.நன்றி.க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்கமுடியாது.எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள்.நானே ராட்சசனை மீறி படம் செய்யமுடியாது என நினைத்தேன். அதை மீறமுடியாது.ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம்.கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது.ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார்.இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது.அவரே கதைகேட்டு பாராட்டியபோது,எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப்படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன்.பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது.ரூட்டடாக எடுத்த படங்கள்தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது.அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் 200 சதவீத உழைப்பை தந்துள்ளனர்.என் மனைவி ஜிவாலாவிற்கு நன்றி.ஒரு புதுவிஷயம் முயற்சி செய்துள்ளோம்.நீங்கள் தரும் பாராட்டுக்கள்தான் எனக்கு புதுவிஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது.இந்தப்படம் பொறுத்தவரை செல்வா சார் தான் ஹைலைட்.இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார்.தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக,உங்கள் உழைப்பும் ஒரு காரணம்.இப்படத்தில் நடித்ததற்கு நன்றி.ஷ்ரத்தா,எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர்தான் மனதில் வந்தார்.படத்தின் முதல் 30 நிமிடம் அவர்தான் தாங்கியுள்ளார்.மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார்.எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார்,அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது.கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார்.ஆர்யன் என் பையன் பேர்.அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் மகன் ஆர்யன் பேசியதாவது..,

என்னுடைய அப்பா என் பெயரில் படமெடுத்துள்ளார். என் பெயரில் படம் வருவது எனக்கு பெருமையாக உள்ளது.இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள்.உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts