என் முதல்பட ஹீரோ கவின் என்பது எனக்குப் பெருமை – சதீஷ் பேச்சு
நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது…..
படம் ஜாலியாக இருக்கும்.நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம்.தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும் என்றார்.
படத்தொகுப்பாளர ஆர்.சி.பிரணவ்….,
இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப்படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம்.சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது என்றார்.
கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன்…..
ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்லபடம் எடுத்திருக்கிறோம்.எல்லோரும் ‘தி பெஸ்ட்’ கொடுத்திருக்கிறார்கள்.அது டிரெய்லர் பார்க்கும்போதே உங்களுக்குத தெரிந்திருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
நடிகர் ஷக்தி……
கவின் அண்ணாவுடன் படம் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.வாய்ப்புக் கொடுத்த கவின் அண்ணா,சதீஷ் சாருக்கு நன்றி.படத்தில் சோஷியல் அவேர்னஸூம் செய்து இருக்கிறேன்.அது படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும்.படக்குழுவினர் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி.ஜாலியான கலர்ஃபுல்லான படமாக உருவாகி இருக்கிறது ‘கிஸ்’. உங்கள் ஆதரவு தேவை என்றார்.
நடிகை ப்ரீத்தி…..
‘கிஸ்’ மூவி ஜாலியாக எடுக்கப்பட்ட படம். முழுக்க என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும்.படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பீர்கள்.சதீஷ் மாஸ்டருடைய ஃபீமேல் வெர்ஷனாகதான் என்னுடைய கேரக்டர் படத்தில் இருக்கும்.ஜென் மார்ட்டின் இசை அருமையாக இருக்கும்.தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
நடிகர் மிர்ச்சி விஜய்…..
நானும் கவினும் ஆரம்பகாலத்தில் இருந்தே நண்பர்கள். இப்போது ஒரு நண்பனாக அவருடன் சேர்ந்து பணிபுரிந்ததும் மகிழ்ச்சி.இன்னும் பல உயரங்கள் செல்ல வாழ்த்துகள்.சதீஷ் அருமையாக படத்தை இயக்கியுள்ளார்.படத்தில் பணிபுரிந்த எல்லோருமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.உங்கள் ஆரதவை கொடுங்கள்என்றார்.
நடிகர் விடிவி கணேஷ்……
தூக்கத்தில் கூட எதாவது சேட்டை செய்து கொண்டே தூங்கும் ஹைப்பரான நபர்தான் சதீஷ்.நடிகர் விஜய் என்றால் சதீஷ்க்கு ரொம்பவும் பிடிக்கும்.நெல்சன் ஒரு டைம் சொன்னால் அதற்கு முன்பே சதீஷ் இருந்தால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவார்.அவர் செய்யும் சேஷ்டை எல்லாம் பார்த்து விஜய் சிரிப்பார்.செட்டே கலகலப்பாக இருக்கும்.’பீஸ்ட்’ படத்தில் சதீஷூடன் நான் நடித்த லிஃப்ட் சீன் தெலுங்கில் பார்த்துவிட்டு நிறைய இரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.கிஸ் என்றதும் எனக்கு கிடைத்த முதல் முத்தம்தான் நியாபகம் வருகிறது.மகாபலிபுரம் கடற்கரையில் பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் கேட்டு வாங்கிய முத்தம்.என் வாழ்க்கையில் அதை மறக்கமாட்டேன்.படக்குழுவினர் எல்லோருமே ஜாலியாக வேலை பார்த்திருக்கிறார்கள்.உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை என்றார்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின்…..
கவின் அண்ணாவுடன் மூன்றாவது படம் எனக்கு. டீமே ஜாலியாக இருந்தது.விடிவி சார், ப்ரீத்தி, தொழில்நுட்ப குழு என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். கவின்,சதீஷூக்கு வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் சதீஷ்……,
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு மிக்க நன்றி! ‘கிஸ்’ என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம்தான் இருந்தது.ஆனால், இந்தக்கதைக்கு ‘கிஸ்’ டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம்.உடனே சம்மதித்தார்.அவருக்கு நன்றி! கவினின் முதல்படத்திற்கு நான் கோரியோகிராப் செய்தேன்.இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அவர் ஹீரோ.இது எனக்கு பெருமையான தருணம். ப்ரீத்தி,விடிவி சார் என எல்லோரும் பெஸ்ட்டாக இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு சப்போர்ட் பண்ணுங்க என்றார்.
நடிகர் கவின்..,.
உதவி இயக்குநர்,ஒளிப்பதிவாளர்,ஆக்ஷன் மாஸ்டர், தயாரிப்பாளர் ராகுல் என இந்தப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.படத்தின் முதல் சிங்கிள் பாடி தந்த அனிருத் சாருக்கும் நன்றி.’என்னாலே…’ பாடல் எழுதித்தந்த விக்னேஷ்சிவன் அண்ணன்,விஷ்ணு எடவன், அருண் ராஜா காமராஜா,வாய்ஸ் ஓவர் தந்த விஜய் சேதுபதி சார் எல்லோருக்கும் நன்றி.பிஸி ஷெட்யூல்க்கு மத்தியில் இந்த நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி வந்த விடிவி சார்,ப்ரீத்திக்கு நன்றி.சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடையவேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜென் இசை இந்தப்படத்திற்கு பெரியபலம்.அவர் அடுத்தடுத்த உயரங்கள் செல்வார்.செப்டம்பர் 19 அன்று படம் ரிலீஸ் ஆகிறது. நிச்சயம் குடும்பத்தோடு நீங்கள் பார்த்து என்ஜாய் செய்யலாம்
இவ்வாறு அவர் பேசினார்.











