செய்திக் குறிப்புகள்

டிரெய்லருக்குப் பின் அதிக எதிர்பார்ப்பு – மஹத் உற்சாகம்

இயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’.

இந்தத்திரைப்படத்தில் வில்லனாக
ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘தங்கலான்’ சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்,
படத்தொகுப்பு: பி. பிரவின் பாஸ்கர்.

படம் குறித்துப் படக்குழுவினர் கூறியதாவது….

இப்படத்தில் நாயகன் மஹத், வடசென்னையைச் சேர்ந்த ஃப்ரீவீலிங் பையனாக நடித்துள்ளார். வடசென்னை பையனாக மஹத் இந்தப் படத்தில் நடித்திருப்பது இந்தக் கதைக்கு கூடுதல் மைலேஜை சேர்த்திருக்கிறது. படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும் இதில் சில உணர்ச்சிகரமான தருணங்களும் இருக்கிறது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா மற்றும் மஹத்தின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிச்சயம் இரசிகர்கள் மனதைக் கவரும்.

யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும். பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. யோகிபாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளுக்குப் பிடித்தமானதாக அமைந்துள்ளது.

மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் நித்யஸ்ரீயின் குரலில் தரண் இசையில், கு.கார்த்திக் வரிகளில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இவ்வாறு கூறினர்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெரியதிரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

டிரெய்லர் வெளியானதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதனால் படத்தின் நாயகன் மஹத் உற்சாகமாக இருக்கிறார்.

Related Posts