சினிமா செய்திகள் நடிகர் நடிகை

ஸ்ரீதேவிக்கு கமல் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 54. இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.

பிரபலமானவர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஸ்ரீதேவியை விடலைப்பருவம் முதல் அருமையான பெண்மணியாக வளரும் வரை பார்த்திருக்கிறேன். அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு அவர் தகுதியானவரே. கடந்த முறை அவரைச் சந்தித்தது முதல் அவரது நினைவுகள் என் உள்ளத்தில் பளிச்சிடுகின்றன. சத்மாவின் தாலாட்டு என்னை இப்போது ஆக்ரமித்துள்ளது, அவரை இழந்து விட்டோம்.

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்.

Related Posts