கமலைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ரஜினி எடுத்த புதுமுடிவு
கமல் நடித்த விக்ரம் படத்துக்கு முன்னதாகவே, கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கமலை நாயகனாக வைத்து விக்ரம் படத்தை இயக்கிவிட்டார் லோகேஷ்கனகராஜ்.
இப்போது மீண்டும் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் அப்படம் உருவாகும் என்கிறார்கள்.
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.
அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறாராம்.ரஜினி, நெல்சன் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இந்தப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்பதில் தற்போது மாற்றம் நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தை ராஜ்கமல் நிறுவனத்தோடு இணைந்து ரஜினிகாந்த்தும் தயாரிப்பில் இறங்கவிருக்கிறாராம்.
பல வருடங்களாகச் சொந்தத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த ரஜினிகாந்த், இப்போது இப்படி ஒரு முடிவெடுக்கக் காரணம் இருக்கிறதாம்.
என்ன காரணம்?
கமலின் விக்ரம் படத்துக்குக் கிடைத்த வசூல்தான் காரணமாம். இந்தப்படத்தில் கமலுக்கு இவ்வளவு இலாபமா? என்று வாய்பிளக்காதவர்களே இல்லை. அந்த வரிசையில் ரஜினியும் சேர்ந்திருக்கிறார் என்கிறார்கள்.
கமலுக்குக் கிடைத்த வசூலைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ரஜினி,தான் நடிக்கும் படத்திற்குச் சம்பளம் என்று கேட்காமல் இலாபத்தில் பங்கு என்று கேட்டால் பெரும்தொகை கிடைக்கும் என நினைத்தே தயாரிப்பில் நானும் இணைகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆளுக்குப் பாதி அதாவது ஐம்பது விழுக்காடு பங்குதாரராக ரஜினியின் நிறுவனம் இணையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதைக் கமலும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.











