சினிமா செய்திகள்

ஆர்யா செய்த செயல் – கமல் கடுங்கோபம்

ஆர்யா இப்போது சக்திசெளந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் எனும் படத்தை முடித்துள்ளார். இதற்கடுத்து மகாமுனி இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆர்யாவை அணுகியிருக்கிறார்கள்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யாவை நடிக்க வைப்பதுதான் திட்டம்.

முத்தையாவிடம் கதை கேட்டு அது ஆர்யாவுக்கும் பிடித்துவிட்டதாம்.

இந்நிலையில் சம்பள விசயத்தில் ஆர்யாவுக்கும் ராஜ்கமல் நிறுவனத்துக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால், இயக்குநர் முத்தையாவிடம்,ராஜ்கமல் நிறுவனத்தில் படம் செய்யவேண்டாம். நீங்கள் என்னுடன் வாருங்கள் வேறொரு நிறுவனத்தில் பெரிய சம்பளம் வாங்கித் தருகிறேன். நாமிருவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்று அழைப்பு விடுத்தாராம்.

ஆர்யாவின் அழைப்பை முத்தையா ஏற்றுக்கொண்டார் என்றும் இந்த விசயத்தில் இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்றும் இரண்டு கருத்துகள் சொல்லப்படுகின்றன.

எப்படியிருந்தாலும் நாம் ஒரு படத்துக்காக அழைத்தால் இயக்குநரையும் சேர்த்துக் கொண்டு ஆர்யா வெளியில் போகிறார் என்பதால் அவர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம் கமல்.

ஏற்கெனவே, ஞானவேல்ராஜா தயாரிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின், ஞானவேல்ராஜாவுடன் கருத்து வேறுபாடு வந்ததால் நலன்குமாரசாமியைத் தன்னுடன் வருமாறு ஆர்யா அழைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts