Uncategorized சினிமா செய்திகள்

மாநாடு இந்தி உரிமை கேட்கும் போனிகபூர் தரமுடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அப்படத்தால் பல சிக்கல்கள்.

படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக நடந்த பேச்சுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சிம்புவின் தந்தை டிராஜேந்தர்.

இன்னொரு பக்கம், இப்படத்தைத் தெலுங்கில் குரல்மாற்று (டப்பிங்) செய்து வெளீயிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தைத் தெலுங்கில் குரல்மாற்று செய்து வெளீயிடவேண்டும் என்று சிம்பு தரப்பு சொல்ல, மொழிமாற்று உரிமை கொடுத்தால் அதிக விலை கிடைக்கும் என்பதால் அதற்கே தயாரிப்பாளர் முன்னுரிமை கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது,இப்படத்தின் இந்தி மொழி மாற்று உரிமை கேட்டு வலிமை தயாரிப்பாளர் போனிகபூர் அணுகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த உரிமையையும் கொடுக்க முடியாத சிக்கலில் மாட்டியிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

ஏனெனில், படம் தயாராகும்போதே இந்தி குரல்மாற்று உரிமையை மணிஷ் என்பவரிடம் விற்பனை செய்துவிட்டாராம் சுரேஷ்காமாட்சி.

சுமார் 4.80 கோடிக்கு விற்கப்பட்ட அந்த உரிமை தொடர்பான ஒப்பந்தத்தில், தமிழ் தவிர வேறு எந்த மொழியில் டப்பிங் செய்வதானாலும் ரீமேக் செய்வதென்றால் எங்களிடம் தடையில்லாச் சான்று பெற்றுத்தான் செய்யவேண்டும் என்று இருக்கிறதாம்.

இதனால், தெலுங்கில் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் இந்தியில் போனிகபூர் உள்ளிட்டோர் கேட்கும்போதும் உடனே கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறாராம் சுரேஷ்காமாட்சி.

ஏனெனில், தடையில்லாச் சான்று கேட்டு மணிஷை தொடர்பு கொண்டால் அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுகிறாராம்.

இதனால், நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புகள் வந்தும் அதைச் செயல்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி.

Related Posts