காப்பாற்றிய ரஜினி கவிழ்த்த கமல் – தீபாவளி வார சுவாரசியம்
தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி.
அதற்கு அடுத்து இருப்பது விஜய் தொலைக்காட்சி.
இரண்டுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது.
பிக்பாஸ் 5 ஒளிபரப்பு தொடங்கியதும் வரலாற்றில் முதன்முறையாக சன்னை விஜய் முந்திவிடும் என்று பலராலும் நம்பப்பட்டது.
ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது.
தீபாவளி வாரத்திலான கணக்கெடுப்பில், வழக்கமாக 1100 என்கிற எண்ணில் இருந்த சன் தொலைக்காட்சி 1400 ஐத் தாண்டியிருக்கிறது.
1000 வரை வந்த விஜய் 800 ஆக குறைந்துவிட்டதாம்.
இதற்குக் காரணம், சன் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் ரஜினியின் படையப்பா ஆகிய இரண்டு படங்கள்தாம் என்கிறார்கள்.
அதே சமயம் விஜய் தொலைக்காட்சி நம்பியது கமலின் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை.
தீபாவளியன்று மட்டும் அந்திகழ்ச்சி ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகியது.
கமலை நம்பிய விஜய் தொலைக்காட்சி இருந்த இடத்திலிருந்து மேலும் கீழே இறங்கிவிட்டது.
திரைப்படங்களை அதிலும் குறிப்பாக டாக்டர் மற்றும் படையப்பா ஆகிய படங்களை நம்பிய சன் தொலைக்காட்சி முதலிடத்தைத் தக்க வைத்ததோடு யாரும் தொட முடியாத உயரத்துக்குப் போயிருக்கிறது.
இதில் இன்றொரு சுவாரசியமான விசயம் என்னவெனில், முதன்முறை ஒளிபரப்பான டாக்டர் படத்துக்கு இணையான எண்களை படையப்பா படமும் பெற்றிருப்பதுதான் என்கிறார்கள்.











