மரபு சார் பண்புகளை மறந்தவனின் கதை – மரபு பட செய்தி
அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’. இப்படத்தில் நாயகனாக விக்டரும், நாயகியாக இலக்கியாவும் நடித்துள்ளனர். இவர்களோடு ஆனந்தபாபு மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விசயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
இந்தப்படத்தை தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
வி. ஐ. பி. ஃபிலிம் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பது விழுக்காடு முடிந்துள்ள நிலையில் நேற்று இப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளனர்.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.











