சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது.

‘நாடோடிகள் 2’ படத்தின் மூலம் மீண்டும் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இணைய உள்ளது.

நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள படம் ‘நாடோடிகள் 2’.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.

தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், ‘நாடோடிகள்’ படத்தைப் போன்றே ‘நாடோடிகள் 2’ படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி அமையும் என்று கூறியுள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Related Posts