ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் பட தமிழக உரிமையைக் கைப்பற்றிய லைகா – விலை எவ்வளவு தெரியுமா?
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ வெளியாகவுள்ளது.
உலகமெங்கும் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் ராம்சரண் கதாபாத்திரம், ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரம் ஆகியவற்றுக்கான அறிமுக டீசர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலர் போட்டியிட்டதாகச் சொல்லப்பட்டது.
இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழக திரையரங்கு வெளீயீட்டு உரிமை விலை சுமார் 45 கோடி என்று சொல்லப்படுகிறது.











