பிக்பாஸ் தமிழ் 4 தொடங்குகிறது
தென்னிந்திய மொழிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார்.முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 4 ஆம் பாகம் தொடங்கும் முன்னேற்பாடுகள் கொரோனாவால் தடைபட்டது.
இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஏற்பாடுகள் வேகம் பிடித்துள்ளனவாம்.
கமல்ஹாசனை வைத்து அதற்கான விளம்பரப்படம் எடுக்கும் வேலைகள் தற்போது நடந்துவருகிறதாம்.
விரைவில் விளம்பரப்படம் எடுக்கப்படுமென்றும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல்வாரம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.









