பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்பது பவணந்தியாரின் நன்னூல் பாடல்.12 ஆம் நூற்றாண்டில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.அதேநேரம் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாத்து முன்னோர் வாழ்வியலை தலைமுறைகள் அறியவேண்டும் என்போரும் உண்டு. இரண்டாம்வகையினர் மனநிலையைப் பிரதிபலிக்கும் படம்
மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ்(Maple Leafs Productions) தயாரிப்பில்,படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில்,ஈ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்வில்













