மூன்று நண்பர்கள் இன்பச்சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் போகும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர்.உடனே பயணத்தைத் தொடர்வதை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முனைகின்றனர்.அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? என்பதைச் சொல்வதுதான் ஜிகிரிதோஸ்த். பிக்பாஸ் புகழ்
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவர் அறன்.இவர் இப்போது இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயர் ஜிகிரிதோஸ்த். இயக்கியதோடு படத்தில் நடித்துமிருக்கிறார்அறன்.அவரோடு பிக்பாஸ் புகழ் பெற்ற ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.ஜே.ஆஷிக்,













