குரங்கு பெடல் என்கிற பெயர் அதன் அர்த்தம் ஆகியன இக்கால கட்டத்தினருக்கு முற்றிலும் அந்நியம்.1970 மற்றும் 1980 களில் பிறந்தவர்கள் அனைவருமே இதைக்கடந்துதான் வந்திருப்பார்கள்.அக்கால கட்டத்தினருக்கு மலரும் நினைவுகளையும் இரண்டாயிரத் தலைமுறையினருக்கு ஒரு இனிய வாழ்வியலையும் அறிமுகப்படுத்தும் படம் குரங்கு
வழக்கமான திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலக்கணங்களை உடைத்து திரைக்கலை எனும் காட்சி அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குப் பக்குவமாகக் கடத்தியிருக்கும் படம் சேத்துமான். இப்படத்தின் கதை என்ன? என்றால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதைதான். அவற்றில் எதைச் சொல்ல? எதை விட்டுவிட? தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை













