விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குஷி.ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த அந்தப்படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார்.
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர்.பீரியட் எனப்படும் முற்காலக்கதையைக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்














