பரத் கதாநாயகனாக நடித்திருந்த காளிதாஸ் படம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெளியானது.பரத்தின் முந்தைய படங்கள் சரியாகப் போகாத நிலையில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று பரத்துக்கு மகிழ்ச்சி கொடுத்த படமாக அமைந்தது. அந்தப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார். அறிமுக இயக்குநரான் அவர்,
டிசம்பர் 13 ஆம் தேதி ஏழெட்டுப் படங்கள் வெளியாகின. அவற்றில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை தினா ஸ்டுடியோஸ்,இன்க்ரெடிபிள் புரொடக்ஷன்,லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.ஒரு பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படுகிறார். இவை எதனால் நடக்கிறது? என்பதைக் காவல் அதிகாரிகளான பரத்தும் சுரேஷ்மேனனும் இணைந்து புலனாய்வு செய்வதுதான் கதை. படத்தில் நாயகன் பரத்தின் பெயர் காளிதாஸ். எனவே அந்தப்பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
பரத் கதாநாயகனாக நடித்துள்ள படம் காளிதாஸ் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ள ‘காளிதாஸ்’ படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குநரான் இவர், பல நல்ல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இயக்குநர். அத்துடன், முறையாக சினிமாவை கற்றுத்தேர்ந்த ஸ்ரீ செந்தில், தனது முதல் படத்தையே கவனிக்கத்தக்க வகையில் இயக்கியிருக்கிறார்.














