பைரி என்பது ஒருவகை கழுகின் பெயர். இந்த பைரி வானில் பறக்கும் புறாக்களை வேட்டையாடுபவை.இதை இந்தப்படத்துக்குப் பெயராக வைக்கக் காரணம், படத்தின் கதைக்கரு புறாப்பந்தயத்தை மையப்படுத்தியது என்பதால். தமிழ்நாட்டில் பல இடங்களில் புறாப்பந்தயங்கள் நடந்தாலும் நாகர்கோயிலில் நடக்கும் பந்தயங்கள் சிறப்பு
ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் பாசப் பின்னணியுடன் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், பைரி திரைப்படத்தின் இசை













