வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் அப்பா திடீரென இறந்துவிடுகிறார். அதனால் அம்மாவும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா ஓட்டிய வண்டியை ஓட்டத் தொடங்குகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். ஒருநாள் அவருடைய வண்டியில் கூலிப்படையினர் ஏறுகிறார்கள்.
வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு இறுதியில் அதாவது டிசம்பர் 30 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகனாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ராங்கி, பிரபுசாலமன் இயக்கத்திம் கோவைசரளா நடித்திருக்கும் செம்பி, யுவன் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் ஆகிய













