படத்தின் பெயரே கொலை என்பதால் படத்திலும் அது நடக்கும் என்பது தெரிந்ததே.அதுதான் கதை, அந்தக் கொலை எப்படி நடந்தது? என்பதை கதாநாயகன் விசாரித்து உண்மையைக் கண்டடைகிறார் என்பது திரைக்கதை. இது பழைய கதைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாத வண்ணம் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார்
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் (Lotus Pictures) உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கொலை. பாலாஜி கே.குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக மீனாட்சி செளத்ரி மற்றும் ரித்திகாசிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன், இசை கிரிஷ்













