தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2023 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துக்கொண்டிருக்கும் படமும் அதே 2023 பொங்கலன்று திரைக்கு வரவிருக்கிறது என்றொரு செய்தி உலவிக்கொண்டிருகிறது. அதற்குக் காரணம்,
வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அஜித் நடிக்கும் அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ‘ஏகே61’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் 3 ஆவது முறையாக அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய்













