தமிழுக்கு நடந்த அநீதி – ரஜினி கமல் குரல் கொடுக்க இயக்குநர் வேண்டுகோள்
ஆகஸ்ட் 9 ஆம் தேதி, 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை அறிவித்தார் நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல். 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது.
முழு விருதுப் பட்டியல்:
சிறந்த கல்வித் திரைப்படம்: சரளா விரளா
சிறந்த ஆக்ஷன் படம்: கேஜிஎஃப் (கன்னடம்)
சிறந்த நடன அமைப்பு: பத்மாவத், குமார்
தாதா சாஹேப் பால்கே விருது:ஃப்யூச்சர் பிலிம் அல்லாத சிறந்த படம்: விபா பக்ஷியின் சன் ரைஸ் மற்றும் தி சீக்ரெட் லைஃப் ஆஃப் ஃப்ராக்ஸ், அஜய் & விஜய் பேடி
சிறந்த இயக்குநர்: ஆதித்ய தார் (படம் -உரி)
சிறந்த திரைப்படம்: ஹெல்லாரோ, குஜராத்தித் திரைப்படம், இயக்கம்: அபிஷேக் ஷா
சிறந்த நடிகர்: அந்தாதூன் படத்தின் ஆயுஷ்மான் குராணா, உரியின் விக்கி குஷால்
சிறந்த நடிகை: மஹாநடி – கீர்த்தி சுரேஷ்
சிறந்த துணை நடிகர்: ஸ்வானந்த் கிர்கிரே- படம் கும்பக்
சிறந்த துணை நடிகை: பாத்ஹை ஹோ-வின் சுரேகா சிக்ரி
சிறந்த ஆக்ஷன் பட இயக்கம்: கேஜிஎஃப் அத்தியாயம் 1
தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம்: ஒன்றல்ல இரடல்ல (கன்னடம்)
சிறந்த வெகுசனப் படம்: பத்ஹாய் ஹோ
சிறந்த அறிமுக இயக்குநர் படம்: நான்
சிறந்த சமூகத் திரைப்படம்: பத்மன்
சிறந்த ஒளிப்பதிவு: உல்லு (மலையாளம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: கேஜிஎஃப்
சுற்றுச்சூழல் காப்பு பற்றிய சிறந்த திரைப்படம்: பானி
சிறந்த பிராந்திய மொழிப்படங்கள்:
தமிழ்: பாரம்
ராஜஸ்தானி: டர்ட்டில்
பஞ்செங்கா: இன் த லேண்ட் ஆஃப் பாய்சனஸ் உமன்
மராத்தி: போங்கா
ஹிந்தி: அந்தாதூன்
தெலுங்கு: மஹாநடி
அசாமிய மொழி: புல்புல் கேன் சிங்
பஞ்சாபி: அர்ஜேதா.
சிறந்த பாடல்: நதிச்சிரமி (கன்னடம்)
சிறந்த இசையமைப்பு (பாடல்கள்): சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)
சிறந்த இசையமைப்பு ( பின்னணி இசை): உரி
சிறந்த ஒலியமைப்பு: உரி
சிறந்த பின்னணிப் பாடகி: மயவி மனவே கன்னடப் படத்துக்காக பிந்து
சிறந்தப் பின்னணிப் பாடகர்: அரிஜித் சிங், படம்: பிந்த்தே தில்
சிறந்த தயாரிப்பு: குமார சம்பவம் (மலையாளம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: மஹாநடி(தெலுங்கு)
சிறந்த அசல் திரைக்கதை: சி லா சவ்
சிறந்த தழுவல் திரைக்கதை: அந்தாதூன்
சிறந்த வசனம்: தாரிக்
சிறந்த குழந்தைகள் படம்: சர்க்காரி அரியா பிரதமிக ஷாலி காசர்கோட்
சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: பி.வி. ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரோஹி (உருது), ஸ்ரீனிவாஸ் போகலே (மராத்தி)
சிறந்த சினிமாட்டோகிராபி: ஒலு, மலையாளம், எம்.ஜே.ராதாகிருஷ்ணன்
சிறப்பு நடுவர் விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், ஜோஜு ஜார்ஜ்- ஜோசப், சுதானி ஃப்ரம் நைஜீரியாவுக்காக சாவித்ரி, சந்த்ரசூட் ராய்.
இவ்வாண்டு தேசிய விருதுகளில் தமிழ்த்திரையுலகம் புறக்கணிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் வருகின்றன.
இயக்குநர் வசந்தபாலன் இது குறித்து எழுதியுள்ள பதிவில்…
தேசிய விருது வழங்குவதில் தமிழ்த் திரைப்படங்களும்,தமிழ்க் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு,பரியேறும் பெருமாள்,வடசென்னை,ராட்சசன்,96 உள்ளிட்ட நிறைய நல்ல,திறமையான,தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா?
பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி, சாதனா தன் உயிரைக் கொடுத்து அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார்.யுவனின் இசை,தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என்ன குறை கண்டீர்கள் ?
கேள்விப்பட்ட போது தான் தெரிந்தது,தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை.
கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள்.
முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன ? இந்த நிலை மாறவேண்டும்.
தமிழ் உச்ச நட்சத்திரங்களும்,திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு வசந்தபாலன் கூறியிருக்கிறார்.











