சினிமா செய்திகள்

169 ஆவது படத்துக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஜினியின் 169 ஆவது படம் அறிவிக்கப்பட்டுவிட்டது.

அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இதுதான் வெளிவந்துள்ள அறிவிப்பு.

இதற்குப் பின்னால் வெளிவராத பல செய்திகள் இருக்கின்றனவாம்.

அவை என்ன?

ரஜினியின் 169 ஆவது படத்துக்காக சுமார் ஒருடஜன் இயக்குநர்களிடம் கதை கேட்டுவிட்டார்கள். எந்தக்கதையும் ரஜினிக்குத் திருப்தியாக இல்லை.

எனவே, யாரையும் நம்பாமல் ரஜினியே ஒரு கதையை உருவாக்கினாராம். 

அமிதாப்பச்சனின் சீனிகம் படத்தின் கதையை மனதில் கொண்டு அதேபோல் ஒரு வேடத்தை உருவாக்கியிருக்கிறாராம். அதற்குள் ஒரு முன்கதை, அதில் பரபரப்பான காவல் அதிகாரி வேடம் ஒன்றை வைத்துக் கதை உருவாக்கினாராம். 

கதையில் ரஜினிக்கு ஒரு மகன் உண்டு, ரஜினி காதலிக்கும் பெண், அவர் மகனைக் காதலிக்கிறார் என்கிற பாலச்சந்தர் பாணி கிளைக்கதையும் இருக்கிறதாம்.

இந்தக்கதைக்குத்தான் திரைக்கதை அமைத்து இயக்கவிருக்கிறாராம் நெல்சன். இப்போது திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

இதற்காக ரஜினி வீட்டுக்கு அருகிலேயே தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நெல்சன். 

நல்லபடம் கொடுத்தால் நல்லது.

Related Posts