October 29, 2025
சினிமா செய்திகள்

வீட்டுக்குப் போன தயாரிப்பாளர் விக்கித்து நின்ற விஷால்

விஷால் நடிக்கும் 33 ஆவது படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 அன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது.

விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் என்றும் அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான சில நாட்களில் அந்தப்படத்துக்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைத்ததாக அறிவித்தார்கள்.

அதன்பின் சில பல தடைகளைத்தாண்டி அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

அதேசமயம், தொடங்கியதிலிருந்து படப்பிடிப்பு சுமுகமாக நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஐந்துநாட்கள் படப்பிடிப்பு என்று சொல்லி படப்பிடிப்பு தொடங்கினால் முதல் இரண்டுநாட்கள் வரமாட்டாராம் விஷால். அப்படியே முதலில் வந்துவிட்டாலும் நான்காம் நாள் காணாமல் போய்விடுகிறாராம்.

இதனால், மிகவும் மனம் நொந்த தயாரிப்பாளர் வினோத், நேராக விஷால் வீட்டுக்குச் சென்று விஷாலின் பெற்றோரிடம் புகார் கூறியிருக்கிறார்.

அவர்களுக்கு அப்போதுதான் விஷால் இப்படியெல்லாம் செய்கிறார் என்கிற விசயமே தெரிந்தது என்கிறார்கள்.

தெரிந்துமட்டும் என்ன செய்ய? அவர்களும் மனம் நொந்து வினோத்துக்கு ஆறுதல் கூறி அனுப்பிவைத்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தத் தகவல் தெரிந்து விஷால் விக்கித்துப் போய்விட்டாராம். என்னது இப்படி வீடு வரைக்கும் போய் புகார் சொல்லியிருக்கிறாரே? என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார்.

இப்போது விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் லத்தி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளிலும் மிகத்தாமதம் ஏற்படுகிறது. அதற்குக் காரணமும் விஷால்தான் என்கிறார்கள்.

எல்லாப்படங்களிலும் இதுபோன்ற புகார்கள் வருவது அவருக்கு நல்லதல்ல என்று அவருடைய நலம்விரும்பிகள் வருந்துகிறார்கள்.

Related Posts