மாஸ்டர் டீசர் எப்படி? – பார்த்தோர் சொல்லும் பரபரப்பு தகவல்கள்
விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
2020 ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப்படம் கொரோனாவால் தாமதமானது.
2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற இந்தப்படத்தின் டீசர் எனப்படும
குறுமுன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இத்றகாகவே சுமார் முப்பது இலட்சம் செலவு செய்து நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.
வெளிவிருமுன்பே திரையுலக முக்கியஸ்தர்கள் சிலர் இந்த டீசரைப் பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் மத்தியில் உலவும் தகவல்…
மாஸ்டர் டீசர் ஒன்றரை நிமிடங்கள் இருக்கிறதாம்.
முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களைக் குஷிப்படுத்துகிற மாதிரி அமைந்துள்ளதாம் இந்த டீசர்.
விஜய்சேதுபதிக்கும் டீசரில் முக்கியத்துவம் இருக்கிறதாம். அவர் வருகிற இடங்கள் மிகவும் ஆரவாரமாக இருக்கும் என்கிறார்கள்.
இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் விஜய் வருகிற காட்சிகள் அமைந்திருக்கிறதாம்.
இந்த டீசரில் அவருக்கு வசனமே இல்லை என்றாலும் காட்சி மிரட்டலாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.
விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்களுக்குச் சரியான தீபாவளி விருந்தாக இந்த டீசர் இருக்கும
என்கிறார்கள்.










