October 30, 2025
சினிமா செய்திகள் நடிகர்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டைவேடம் என்பது உண்மையா?

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

மதுரை, தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக படத்தின் முதல்பார்வையில் இரண்டு அஜித் இடம் பெற்றிருந்தனர்.

நரைத்த தலையோடு ஒருவரும் கறுப்பு முடியோடு ஒருவரும் இருந்ததால் இரட்டை வேடம் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம், படத்தில் அஜித்துக்கு ஒரு வேடம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

கதைப்படி தற்காலக் காட்சிகளில் நரைத்த தலையுடனும் பிளாஷ்பேக் காட்சிகளில் கறுப்பு முடியுடனும் வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts