November 5, 2025
செய்திகள் நடிகர்

‘இந்தியன் 2‘ படத்தில் நடிக்க கமல் நிபந்தனை

ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதே கமல் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.9’ படத்தில் அக்‌ஷய்குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை ஷங்கர் ஒப்புக்கொண்டார்.

முதலில் தயங்கிய தயாரிப்பு நிறுவனம் பின்பு குறிப்பிட்ட அளவு பட்ஜெட் ஒதுக்கி இவ்வளவுதான் சம்பளம், அதற்கு ஒப்புக்கொள்ளும் நடிகரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். அவர்கள் ஒதுக்கியுள்ள தொகை பதினைந்து கோடி என்கிறார்கள்.

15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பொருத்தமான இந்தி நடிகரை இப்போது வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts